புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கவர்ச்சி காட்ட மட்டும் நான் சினிமாவிற்கு வரவில்லை.. இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் 2005ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

ராதிகா ஆப்தே தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பிறந்தாலும் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தில் அறிமுகமானாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ராதிகா ஆப்தே இந்தியில் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர் கவர்ச்சியாக நடிப்பது பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்தார். அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இது போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.

அதற்கு அந்த இயக்குனர் நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமல்லாது ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்களா. என் படத்தில் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று உங்களை அணுகினேன் என்று கூறினார். அதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறில்லை கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக மற்றும் கவர்ச்சியாக நடிக்க மட்டும்தான் நான் சினிமாவிற்கு வரவில்லை கதை பிடித்து இருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன், கதை இல்லாமல் உடம்பை மட்டும் காட்டும் நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என்று மிக கடுமையாக கூறினார்.

Trending News