ராதிகா ஆப்தே ஹாலிவுட், பாலிவுட் என பல துறைகளில் பணியாற்றியுள்ளார். ஆனால் 2011 ஆம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். தோனி படத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்துதான் மீண்டும் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார். என்னதான் ராதிகா ஆப்தே தோனி மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்தாலும் 2016ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தின் மூலம்தான் நன்கு பிரபலம் அடைந்தார்.
ஏனென்றால் அப்படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்த ஒரே காரணத்தால் ரஜினி ரசிகர்கள் அவரை கொண்டாட தொடங்கினர்.
அதன்பிறகு இவர் சித்திரம் பேசுதடி இரண்டாம் பாகத்தில் நடித்தும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றி மீண்டும் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
![Radhika-Apte](https://www.cinemapettai.com/wp-content/uploads/2018/05/Scenic-Radhika-Apte-Hot-Navel-In-Shorts-Pics-Photoshoots4.jpg)
ஆனால் தமிழில் தொடர் வெற்றி கிடைக்காவிட்டாலும் பாலிவுட்டில் இவர் நடிக்கும் படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகின்றன. எந்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கிறதோ அந்த அளவிற்கு கிசுகிசுக்களுக்கும் வந்த வண்ணம் உள்ளன.
கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இல்லாத நடிகை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு பல நடிகர்களுடன் இணைத்து கிசு கிசு செய்திகள் வருவது வழக்கம். தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.