சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வில்லி அவதாரம் எடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமியில் எதிர்பாராத ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. தற்போது இதில் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது. அதாவது கோபி ராதிகா வீட்டில் படாத பாடுபட்டு வருகிறார். காலையில் எழுந்தவுடன் பாக்கியா துண்டு, காபி என எல்லாம் ஏற்பாடு செய்து கோபியை விழுந்து விழுந்து கவனிபார்.

ஆனால் ராதிகாவின் வீட்டில் கோபியை யாரும் கண்டு கொள்வதில்லை. மேலும் கோபியிடம் ராதிகா நம்ப உங்க வீட்டு முன்னாடி வாழ்ந்து காட்டணும். தினமும் அவங்களுக்கு குடைச்சல் கொடுக்கணும். நம்மள பார்த்து இவ்வளவு சந்தோஷமா இருக்காங்களே என்று வயித்தெரிச்சல் படணும் என வில்லி ரேஞ்சுக்கு ராதிகா மாறியுள்ளார்.

Also Read :தாமரை இடத்தை பிடிக்க நினைத்தவருக்கு ஆப்படித்த ஆண்டவர்.. முதலாவதாக கெட் அவுட்டான போட்டியாளர்

இதெல்லாம் எப்படி நடக்கும், ஏனென்றால் ராதிகா ஒரு இடத்தில் இருக்கார், பாக்யா வீடு ஒரு இடத்தில் இருக்கிறார். இதனால் தற்போது ராதிகா, கோபி, மயூ மூவரும் பாக்யா வீட்டின் எதிர்ப்புறம் உள்ள காலி வீட்டிற்கு குடி வருகிறார்கள். இதைப் பார்த்தவுடன் பாக்யா ஆடி போகிறார்.

இதனால் தினமும் பாக்யா குடும்பம் மற்றும் ராதிகா இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிலவ உள்ளது. மேலும் ஏற்கனவே கோபி மீது செம கடுப்பில் உள்ள இனியா இனி மயூவை அவர் கொஞ்சுவதைப் பார்த்தால் சுத்தமாக அப்பாவே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு மாறுவார்.

Also Read :பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுத்த கமல்

பேரன், பேத்தி எடுக்கற வயசுல இப்ப இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு புது மனைவியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த கோபிக்கு இனிமே தான் பாக்கியா குடும்பம் ஆப் அடிக்க உள்ளது. இப்போது பாக்யாவை வெறுப்பேற்றுவதற்காக கோபி இங்கு வந்துள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நிஜத்தில் கோபி படப்போகும் பாடு தான் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க போகிறது. ஒவ்வொரு நாளும் இனி சுவாரஸ்யம் குறையாமல் ரணகளத்துடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தவறாமல் இத்தொடரைக் ரசிகர்கள் பார்த்து ரசியுங்கள்.

Also Read :பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

Trending News