வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வீட்டுக்குள்ள பத்தாதுன்னு வீதியிலும் வெடிக்கப் போகும் சக்காளத்தி சண்டை.. பாக்கியாவுக்கு எதிராக வில்லியாக மாறும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் செக்ரட்டரி தேர்தலில் பாக்யாவே நிற்கச் சொல்லி மற்ற பெண்கள் வற்புறுத்தி உள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் பாக்யாவும் இந்த தேர்தலில் நிற்கிறார்.

இந்த விஷயம் ஒரு வழியாக கோபி காதிற்கு செல்கிறது. இதுதான் சரியான நேரம் என்று கோபி இதை பயன்படுத்திக் கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார். இதனால் வீட்டுக்குள் பத்தாது என்று வீதியிலும் சக்காளத்தி சண்டை வெடிக்கப் போகிறது.

Also Read : இவங்க பைத்தியமா! இல்ல நம்ம பைத்தியமானே தெரியலையே.. கிளைமாக்ஸில் கதற விடும் பாரதிகண்ணம்மா

அதாவது பாக்யாவுக்கு எதிராக ராதிகாவை செக்ரட்டரி தேர்தலில் கோபி நிற்க வைக்கிறார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கிறது. மேலும் மேடையில் ராதிகா பாக்யாவை ஏளனமாக பேசுகிறார். அதாவது வீட்டில் மூன்று வேலையும் சமைக்கும் பெண்ணுக்கு இதைப்பற்றி என்ன தெரியும்.

இந்த தேர்தலில் நன்கு படித்த ஒருவரால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறுகிறார். இதனால் பாக்யா உச்சகட்ட கோபம் அடைகிறார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக வில்லியாக ராதிகா மாறி வருகிறார். இந்த தேர்தல் நடப்பதற்குள் பல சண்டைகள் வெடிக்க உள்ளது.

Also Read : டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

எப்படியும் கடைசியில் செகரட்டரி தேர்தலில் பாக்யா தான் ஜெயிக்க உள்ளார். ஆனால் அதற்குள் பல சூழ்ச்சிகளை செய்ய காத்திருக்கிறார் கோபி. அவை எல்லாவற்றையும் ஒன்றாக முறியடித்து கடைசியில் வெற்றிகனியை பாக்யா தான் பறிப்பார். இதனால் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல் பிரச்சனை வரவுள்ளது.

தன் வேலை உண்டு, தானொண்டு என்று சும்மா இருந்த ராதிகாவை வேண்டுமென்றே கோபி தேர்தலில் நிற்க வைத்து இப்படி அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் ராதிகாவின் கோபத்திற்கு கோபி உள்ளாக உள்ளார். தேவையில்லாமல் இந்த பிரச்சனையிலும் கோபி தலை உருள போகிறது.

Also Read : பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

Trending News