செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா.. மாட்டிக்கொண்டு முழிக்கும் ரெண்டு பொண்டாட்டி காரன்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இதில் தற்போது கோபி, ராதிகா திருமணம் நடந்தேறி உள்ளது. இதனால் கோபியின் அப்பா மற்றும் அம்மா இனி நீ என் மகனே இல்லை என கோபியை உதறி தள்ளிவிட்டு, எங்களுக்கு இனி மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் தான் எல்லாமே எனக் கூறுகிறார்கள்.

மேலும் நாங்கள் செத்தா கூட எங்க முகத்துல முழிக்காத என கூறிவிட்டு செல்கிறார்கள். அவர்கள் இப்படி ராதிகாவை ஏளனமாக பேசியதால் தற்போது வில்லியாக மாறி வருகிறார். அதுவும் மண்டபத்தை விட்டு கோபி, ராதிகா வெளியே செல்லும்போது பாக்யா மேலே இருந்து பார்க்கிறார். இதைப் பார்த்த ராதிகா கோபி கையை இறுக்கியமாக பிடித்துக் கொள்கிறார்.

Also Read :பிக் பாஸ் சீசன்-6 களமிறங்கும் 20 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட.. வேட்டையாட காத்திருக்கும் ஆண்டவர்

மேலும் இனியா வீட்டுக்கு வந்து செழியன் இடம் எல்லா விஷயத்தையும் சொல்லி கதறி அழுகிறார். அதன் பிறகு பாக்யா வந்தவுடன் இனியா மற்றும் செழியன் இருவரும் தனது அம்மாவை கட்டிக் கொண்ட அழுகிறார்கள். இனிமேல் இந்த வீட்டை நான் பாத்துக்குறேன்மா என செழியன் பாக்யாவுக்கு வாக்கு கொடுக்கிறார்.

அதன் பிறகு எழில் வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரிகிறது கோபிக்கு திருமணமான விஷயம். மேலும் கோபி கல்யாணத்துக்கு தான் தனது அம்மா சமைக்கப் போய் உள்ளார் என்ற விஷயத்தை கேட்டு எழில் ஆடிப் போகிறார். அதன் பின்பு தனது அம்மாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் எழில் ஈடுபடுகிறார்.

Also Read :புருஷனை இறுக்கிப் பிடித்த மனைவி.. கொடூரமான வில்லியாக மாறிய ராதிகா

மறுபக்கம் ராதிகா, கோபி இருவரும் வீட்டுக்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் அடிக்கடி இந்த வீட்டுக்கு வருவார் தானே இவரு. இவரையே இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிகிச்சா அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கோபமாக ராதிகா வீட்டினுள் செல்கிறார்.

மேலும் மண்டபத்தில் தனக்கு சாதகமாக கோபி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற கோபத்தில் ராதிகா உள்ளார். கோபியும் யாருக்கு பேசுவது என்று தெரியாமல் இரண்டு பொண்டாட்டிகாரன் திண்டாட்டம் என்பது போல முழித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read :கள்ளத்தொடர்பால் கர்ப்பிணி மனைவியை அடித்த கணவன்.. சீரியலை விட மோசமான நிஜ வாழ்க்கை

Trending News