செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தாத்தாவான சந்தோசத்தில் கோபி வெளுத்து வாங்கிய ராதிகா.. இதுக்கு மேல அசிங்கப்பட ஒன்னும் இல்ல

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்குப் பிறகு அல்லப்படும் கோபி, தற்போது தாத்தாவாகிவிட்டதை வைத்து பாக்கியலட்சுமி குடும்பமே அவரை கலாய்க்கிறது. புது மாப்பிள்ளை ஆனா கோபி வயதானதை மறந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குசியுடன் இருப்பதை பார்க்க முடியாத கோபியின் அப்பா செழியனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, அதன் பிறகு நீ தாத்தா என்று கிண்டல் செய்கிறார்.

இதனால் அக்கம் பக்கத்தினரிடம் அசிங்கப்பட்டு போன கோபியை, ராதிகா தேற்றாமல் அவரும் சேர்ந்து திட்டுகிறார். இப்படி வாழ்க்கையே நரகமாயிருச்சு என்று கோபி தனக்குத்தானே புலம்புகிறார். மேலும் பாக்யாவின் முன்பு ராதிகா கோபியுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்றுதான் கூறினார்.

Also Read: புது அவதாரம் எடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. பரத்துடன் மிரள விடப் போகும் முதல் படத்தின் போஸ்டர்

ஆனால் எதிர் வீட்டில் வந்து குடியேற வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. இப்படி பாக்யாவின் குடும்பத்தின் சந்தோஷத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கோபி தான் என்று ராதிகா அவரை கரித்துக் கொட்டுகிறார். இதனால் கோபத்தில் பொம்மை உள்ளிட்டவற்றையெல்லாம் விட்டு எறிகிறார்.

இதுமட்டுமின்றி ராதிகாவின் மகள் இனியா உடன் நெருங்கி பழகியவர் என்பதால் பள்ளியில் பழக்க தோஷத்தில் அவருடன் பேச முயற்சிக்கிறார். அப்போது இனியா ராதிகாவின் மகளை தள்ளி விடுகிறார்.

Also Read: அத்து மீறும் கோபி.. மஞ்சக் கயிறு கழுத்துல ஏறினதும் டோட்டலா மாறிட்டியே ராதிகா

இப்படி அப்பா மீது இருக்கும் கோபத்தை ராதிகாவின் மகள் மீது காட்டும் இனியாவால் தன்னுடைய மகளின் மனம் புண்படுகிறதே என ராதிகா கலங்குகிறார், இந்த கோபத்தை எல்லாம் ராதிகா கோபியிடம் வெளிப்படுத்துகிறார். மேலும் ஜெனி கர்ப்பமாக இருப்பதால் எழிலின் தயாரிப்பாளரின் மகள் ஷாமிலி வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு குடும்பத்தினர் ஷாமினிலியை எழிலுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்கின்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் எழில் அமிர்தாவை விரும்புவதால் இப்போது வீட்டிற்கு வந்திருக்கும் ஷாமிலியால் அவர்களது திருமணத்தில் குளறுபடி ஏற்படப்போகிறது. இருப்பினும் குடும்பத்தை சமாளிக்கும் எழில் கடைசியில் அமிதாவை தான் திருமணம் செய்யப் போகிறார்.

Also Read: எகிறிய சன், விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்.. நீண்ட நாட்களுக்கு பின் விட்ட இடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா

Trending News