புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாக்யாவை பழிவாங்க சவால் விடும் ராதிகா.. கோபிக்கு அசிங்கபடுவதே வேலையா போச்சு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் கோபியிடம் விட்ட சவாலில் பாக்கியா கெத்தாக ஜெயித்து விடுகிறார். அதாவது பாக்கியாவை சீண்டி பார்த்து அதில் குளிர் காய வேண்டும் என்று ஆசைப்பட்ட கோபி ராதிகாவிற்கு கடைசியில் மிஞ்சினது அவமானம் தான். பணத்தை ரெடி பண்ணி இருக்க மாட்டார் என்ற நினைப்பில் வாய்க்கு வந்தபடி கோபி பேசினார்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா என்று பாக்கியா மொத்த 18 லட்சம் ரூபாய் பணத்தையும் சொன்ன சரியான நேரத்தில் திருப்பிக் கொடுத்து விடுகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோபி ராதிகா மூஞ்சியில் ஈ ஆடல. ஆனாலும் கோபி குடும்பத்தினரிடம் செண்டிமெண்டாக பேசி அவர்களை லாக் பண்ணிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

ஆனால் இவர் என்ன பண்ணாலும் அதற்கு இடம் கொடுக்காமல் ஒவ்வொருத்தராக திருப்பி அடித்து கோபிய அசிங்கப்படுத்தி விட்டார்கள். அதிலும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோபியின் அம்மாவும் அசராமல் வச்சு செய்து விட்டார். கடைசியில் பொண்ணு செண்டிமெண்டில் இங்கு இருந்திடலாம் அப்படின்னு நினைத்த கோபிக்கு அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது.

ஆக மொத்தத்துல குடும்பத்தின் முன் கோபியோட பருப்பு எல்லாம் வேகாமல் போய்விட்டது. மேலும் பாக்கியா பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு புத்திசாலித்தனமாக ரிஜிஸ்ட்ரேஷன் பத்தியும் பேசி கூடிய விரைவில் நீங்கள் கையெழுத்து போட வேண்டும். இல்லை என்றால் நீங்கள் குடித்த பிறகு உங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் போய்விடும்.

Also read: வசமாய் சிக்கிய கண்ணன்.. ஐஸ்வர்யா கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டா, இது தேவைதான்

மறுபடியும் இது என்னுடைய வீடு என்று உரிமை கொண்டாட வருவீங்க. அதனால எங்க பேர்ல இந்த வீட்டை மாற்றி எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு கொடுக்கணும் என்று தெளிவாக பேசி விடுகிறார். இதுல ஏதாவது குளறுபடி பண்ணிடலாம் என்று பார்த்த கோபியை இவருடைய அப்பா சரியான முறையில் பேசி நாளைக்கே கையெழுத்து போட வரவேண்டும் என்று கூறி விடுகிறார்.

இனிமேலும் இங்கே இருந்தால் அவமானப்பட வேண்டியதுதான் என்று ராதிகா கோபியை கூட்டிட்டு வெளியே போய் விடுகிறார். பிறகு ராதிகா இத்தனை நாள் பாக்கியா உங்களுக்கு மட்டும் தான் எதிரியாக இருந்தார். இனிமேல் பாக்கியாவிற்கு நான் தான் எதிரி என்று பழிவாங்கும் உணர்ச்சியுடன் பேசுகிறார். அடுத்ததாக வீட்டை உங்க பேரில் எழுதி முடிக்கலாம் என்று மாமனாரிடம் பாக்கியா கூறுகிறார். இதற்கடுத்து இன்னும் எந்த கதையை வைத்து உருட்ட போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

Trending News