செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாக்கியலட்சுமி சீரியலில் உண்மையான அப்பாவை விரட்டும் குடும்பம்.. கோபி இந்தப் பொழப்புக்கு நீங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு கல்லூரி காதலி ராதிகாவுடன் சேர்ந்து வாழ கோபி துணிந்துவிட்டார். அதற்கு சட்டரீதியாக விவாகரத்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகா முதல் கணவர் ராஜேஷிடம் விவாகரத்து வாங்கி உள்ளார்.

இதன்பிறகு கோபி தன்னுடைய மனைவி பாக்யாவை விவாகரத்துப் பெறுவதற்காக வக்கீலை அணுகி இருக்கிறார். இவ்வாறு இருக்க ராதிகாவின் மகள் மயூ பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மயூவின் உண்மையான அப்பா ராஜேஷ் வந்திருக்கிறார்.

ஆனால் அவர் கொண்டு வந்த பரிசுப்பொருளை வாங்க மறுத்த மயூ, ‘தனக்கு இனிமேல் கோபி அங்கிள் தான் எல்லாமே, அவர் எனக்கு கிப்ட் வாங்கித் தருவார்’ என்று பெத்த அப்பாவை தூக்கி எறிந்து பேசுகிறாள்.

அதுமட்டுமின்றி ராதிகாவின் அம்மா ராஜேஷிடம் ‘கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இனிமேல் இந்த வீட்டிற்கு வராதே’ என்று துரத்தி அடிக்கின்றனர். ‘இதற்காக தான் என்னை அவசர அவசரமாக விவாகரத்து செய்தாயா?’ என்று ராதிகாவிடம் கடும் கோபத்தில் ராஜேஷ் அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுகிறார்.

இதன்பிறகு ராஜேஷ் கோபியைபழிவாங்கும் எண்ணத்தில் பாக்யா மற்றும் அவர்களது குடும்பத்திற்கு இதை தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுக்கப் போகிறார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் ராஜேஷின் மூலம் பாக்யாவிற்கு உண்மை எல்லாம் தெரியப்போகிறது.

பிறகு பாக்யா தன்னுடைய கணவர் மீது வைத்திருந்த நம்பிக்கை சுக்குநூறாக உடைந்ததை எண்ணி வருத்தம் அடைந்து, அதன்பின் தன்னுடைய பிள்ளைகளுக்காக புரட்சிகர பெண்மணியாக வாழ முடிவெடுக்கப் போகிறார்.

Trending News