வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த பாக்யா குடும்பம்.. வில்லி அவதாரம் எடுக்கும் சக்காளத்தி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. கோபி தனது குடும்பம் தன்னை வீட்டை விட்டு துரத்தியதாகக் கூறி ராதிகாவிடம் வந்த கதறுகிறார். அதன்பின்பு கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

இதைப்பார்த்த கோபியின் அப்பா ராமமூர்த்தி ராதிகாவின் வீட்டினுள் சென்று கண்டபடி பேசுகிறார். ஆனால் ராதிகா அண்ணன் உங்க பையனை கண்டிக்க தான் உங்களுக்கு உரிமை இருக்கு என கோபமாக பேசியவுடன் எதுவும் சொல்ல முடியாமல் ராமமூர்த்தி அங்கிருந்த செல்கிறார்.

Also Read :பாக்யாவை குத்தி கிழிக்கும் பிள்ளைகள்.. சூடுபிடிக்கும் சக்களத்தி சண்டை, குளிர்காயும் கோபி

இந்நிலையில் கோபியின் அம்மா ஈஸ்வரி உச்சகட்ட கோபத்துடன் ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை ஒளித்து வைத்திருப்பது போல எல்லா ரூமிலும் தேடி ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியே போங்க என கத்துகிறார்.

தனது தோழி பாக்யாவின் கணவனை இத்தனை நாள் காதலித்ததாக ஒரு குற்ற உணர்ச்சியில் இருந்த ராதிகாவை தற்போது ஒவ்வொருவராக வந்து சீண்டியதால் வில்லி அவதாரம் எடுக்கவுள்ளார். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல ராதிகா இந்த பிரச்சனையை வேண்டாம் என வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.

Also Read :தப்பு பண்ணியதால் பைத்தியம் முத்தி போன வெண்பா.. கல்யாணத்தை நிறுத்த இப்படி ஒரு சதியா?

கோபியின் அப்பா, அம்மா என ஒவ்வொருவராக வந்து ராதிகாவை உசுப்பேத்தி விட்டுள்ளனர். இதனால் தற்போது கோபிக்கு சாதகமான முடிவை ராதிகா எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோபியை திருமணம் செய்துகொண்ட இங்கேயே ராதிகா செட்டிலாக உள்ளார்.

இவ்வாறு பாக்யாவிற்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு அவருக்கு ராதிகாவை சக்களத்தியாக ஏற்பாடு செய்துள்ளது அவரது குடும்பம். இதனால் தற்போது சுவாரசியமான அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Also Read :நாமளே ஆக்கினத நாமளே சாப்பிட்டா கடை விளங்கிடும்.. ஹோட்டலால் அசிங்கப்படும் கதிர்-முல்லை

Trending News