கோபியை விரட்டிவிட்ட ராதிகா.. ஹனிமூன் அமர்க்களமா இருக்கு

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்தல் ஒரு மணி நேர எபிசோட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கோபி அவார்ட் பங்க்ஷனுக்கு ராதிகாவை அழைத்து வந்துள்ளார்.

அந்த விழாவிற்கு பாக்யாவும், கோபியின் தந்தையும் வந்திருந்தனர். இந்நிலையில் கோபி விருது வாங்கியவுடன் ராதிகாவை சமாதானப்படுத்துவதற்காக இந்த வெற்றிக்கு பின்னால் இருப்பது என் மனைவி தான் என்று அடித்து விடுகிறார். உடனே கோபியின் நண்பர் பாக்யாவை மேடைக்கு வருமாறு அழைக்கிறார்.

Also Read :ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்.. டிஆர்பிக்காக கெஞ்சும் சேனல்

இதைப் பார்த்த கோபி மற்றும் ராதிகா இருவருமே ஷாக் ஆகிறார்கள். மேலும் மேடையில் பேசிய பாக்யா மற்ற ஆண்களை பேசுவது போல கோபியை வறுத்தெடுக்கிறார். இதனால் கோபி செய்வதறியாமல் கொந்தளிக்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ராதிகா உச்சகட்ட கோபம் அடைகிறார்.

இதனால் ரூமுக்குள் கோபி மற்றும் ராதிகா இடையே கடுமையான சண்டை ஏற்படுகிறது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வந்த உடனே உங்க பிரண்டுகிட்ட என்ன கல்யாணம் பண்ணுன விஷயத்தை சொல்ல வேண்டியது தானே என ராதிகா கோபமாக பேசுகிறார். அதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை என்று கோபி கூறுகிறார்.

Also Read :பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்

ஒரு கட்டத்திற்கு மேல் பேச்சு வார்த்தை முற்றி போக ரூமில் இருந்து கோபமாக கோபி வெளியே வந்து விடுகிறார். ஹனிமூன் கொண்டாட வந்த கோபிக்கு இப்போது தான் ராதிகாவின் சுயரூபம் தெரிந்துள்ளது. ஏனென்றால் கோபி என்ன சொன்னாலும் பாக்யா அடங்கி போக்கிவிடுவார்.

ஆனால் பாக்யாவுக்கு அப்படியே நேர் எதிராக உள்ளவர் ராதிகா. இதனால் இனி அடிக்கடி கோபி, ராதிகா இடையே பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read :பாக்யா முன் அவமானப்பட்ட ராதிகா.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

Advertisement Amazon Prime Banner