புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பாக்யா முன் அவமானப்பட்ட ராதிகா.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் பிரபல தொடர்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர் ஒரு மணி நேர மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரு தொடர்களும் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவதால் மிகுந்த விறுவிறுப்பான கதையாக சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது கோபி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல கொடைக்கானலுக்கு அவார்ட் பங்க்ஷன் மற்றும் ஹனிமூன் கொண்டாட வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஆப்பு வைக்கும் விதமாக மூர்த்தி குடும்பம் மற்றும் பாக்யா குடும்பமும் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.

Also Read :ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

இதனால் கோபி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். மேலும் மற்றவர்கள் முன் கோபி மற்றும் ராதிகா அவமானப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவார்ட் ஃபங்ஷனுக்கு ராதிகா, கோபி இருவரும் சென்றுள்ளனர். அங்கு பாக்யாவும், அவரது மாமனாரும் வந்துள்ளனர்.

அப்போது கோபியை மேடைக்கு அழைத்து அவார்ட் கொடுக்கப்படுகிறது. அதில் பேசிய கோபி நண்பர் இந்த வெற்றிக்கு அவரது மனைவி தான் காரணம் என்று கூறுகிறார். அவரை மேடைக்கு அழைக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னவுடன் ராதிகா ஆர்வமாக மேடைக்கு வர முற்படுகிறார்.

Also Read :மண்டியிட்ட பாரதி.. வெளுத்து வாங்கும் கண்ணம்மாவின் மகள்

ஆனால் பாக்யா மேடைக்கு வாருங்கள் என சொன்னவுடன் ராதிகாவுக்கு அதிர்ச்சி ஆகிறது. மேலும் வேறு வழி இல்லாமல் பாக்யாவும் மேடைக்குச் சென்று பேசுகிறார். கோபியும் இதற்கு வேறு ஏதும் பேசாமல் இருப்பதால் ராதிகா உச்சகட்ட கோபத்தில் கொந்தளிக்கிறார்.

இதனால் கோபி ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு முழிக்க உள்ளார். மேலும் கொடைக்கானலை விட்டு செல்வதற்குள் கோபி ஒரு வழி ஆக உள்ளார். ராதிகா மற்றும் பாக்யா குடும்பத்தில் கோபி அல்லோலப்படுவதை பார்த்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகிறார்கள்.

Also Read :டிஆர்பி-யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்.. அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய விஜய் டிவியின் சங்கமம்

Trending News