வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பூஜைக்கு பாக்கியாவை கூட்டிட்டு வரும் ராதிகா.. பெத்த பிள்ளையும் பொண்டாட்டியும் சேர்ந்து கோபிக்கு வச்ச ஆப்பு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட பிளான்படி எல்லாமே பக்காவாக நகர்கிறது. ஏற்கனவே செழியன் மற்றும் இனியா, கோபி பக்கம் சாய்ந்து விட்டார்கள். இன்னும் மிச்சம் இருக்குது எழில் தான். அதற்கும் ஒரு வழி பண்ணும் விதமாக எழிலுக்கு படத்தை எடுப்பதற்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுத்து பாக்கியாவை தனி மரமாக நிப்பாட்டுவதற்கு கோபி பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி எழிலின் தயாரிப்பாளர் மூலம் பாக்கியா பட பூஜைக்கு வரக்கூடாது என்று கண்டிஷன் போட வைத்துவிட்டார். எழிலுக்கும் தற்போது வேறு வழி இல்லாததால் தயாரிப்பாளரிடம் சம்மதம் தெரிவித்துவிட்டார். அந்த சமயத்தில் பாக்கியா பட பூஜைக்கு வந்ததால் எழில், பாக்யாவிடம் நீங்க வரவேண்டாம் என்று சொல்லி வெளியே அனுப்பி விடுகிறார்.

இதனால் பாக்கியா கண் கலங்கிய படி வெளியே போய்விட்டார். பிறகு எழில் எடுக்க போகும் படத்தின் டைட்டிலை அறிமுகப்படுத்தும் விதமாக பட பூஜையை ஆரம்பித்தார். நல்லபடியாக பட பூஜை முடிந்தவுடன் எழில் அந்த டைட்டிலை ஓபன் பண்ணி அனைவருக்கும் காட்டுகிறார். அதை பார்த்ததும் கோபி மூஞ்சில் ஈ ஆடவில்லை. அந்த அளவிற்கு எழில், கோபிக்கு ஆப்பு வைத்து விட்டார்.

அதாவது கோபி எடுக்க போகும் படத்தின் கதையை பாக்கியலட்சுமி தான். அதனால் அம்மாவின் பெயரை வைத்து அம்மா பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் சொல்லும் விதமாக ஒரு படத்தை எடுக்கப் போகிறார். இதில் மெயின் வில்லனை கோபி தான் என்பதற்கு ஏற்ப சைக்கோ கேரக்டரையும் கொண்டு வந்து கோபி செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக படத்தை இயக்கப் போகிறார்.

இதற்கு இடையில் பாக்கியா அழுது கொண்டே போன பொழுது வெளியே பார்த்த போஸ்டரில் பாக்கியலட்சுமி டைட்டிலை பார்த்து ரொம்பவே ஆனந்த கண்ணீர் விட்டு பெருமைப்பட்டுக் கொண்டார். அந்த சமயத்தில் ராதிகா வரும்பொழுது பாக்யா வெளிய நின்று கொண்டிருப்பதை பார்த்த ராதிகா, பாக்கியாவை உள்ளே கூட்டிட்டு போவார்.

இதை எதிர்பார்க்காத கோபி மொத்தமாக அதிர்ச்சியாய் நிற்கப் போகிறார். பாக்கியா பூஜைக்கு கலந்து கொள்ளக் கூடாது என்று எழில் மூலம் கோபி ஒரு செக் வைத்தார். அதை தவிடு பொடியாக்கும் விதமாக ராதிகா, பாக்கியாவை கூட்டிட்டு வந்து சிறப்பான சம்பவத்தை செய்து விட்டார். இனி ஆனந்த் பற்றிய உண்மையையும் பாக்கியா கண்டுபிடித்து கோபியின் முகத்திரையை வெளியே கிழித்து காட்டுவார்.

Trending News