Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தன் மீது கொடுத்திருக்கும் போலீஸ் கேசை வாபஸ் வாங்க வைப்பதற்கும், குடும்பத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும் கோபி ஏதோ பிளான் பண்ணுவது போல் தெரிகிறது. அதனால் தான் ஈஸ்வரி கூப்பிட்டதும் பாக்கியவுடன் வந்து விட்டார். அது மட்டுமில்லாமல் தற்போது ராதிகாவைவிட பாக்கியா ரொம்ப பெஸ்ட் என்ற நினைப்பில் பாக்கியா பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டார்.
ஆனால் கோபியை நம்பிப்போன ராதிகாவை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தற்போது பாக்கியா புராணத்தை கோபி பாடி கொண்டு வருகிறார். ஈஸ்வரியும் அதற்கேற்ற மாதிரி பாக்கியாவுடன் கோபியை சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்திரங்களையும் செய்ய ஆரம்பித்து விட்டார். அத்துடன் கோபி, பாக்கியா போகும் இடத்துக்கு பின்னாடியே போயி அலைகிறார்.
இதையெல்லாம் பார்த்த பாக்யா இப்பவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோபியை வீட்டுக்குள் வரவைத்து உட்கார சொல்லி சிரித்த முகத்துடன் உங்களுக்கு காபி போட்டு தரவா? உங்களுக்கு பிடிச்ச பிளாக் காபி போட்டு தருகிறேன் என்று சொல்லி காபி கொடுக்கிறார். இதை பார்த்து சந்தோஷப்பட்ட கோபி, பாக்கியாவிற்கு நம்ம மீது கோபம் இல்லை என்று புரிந்து கொண்டார்.
ஆனால் அதன் பிறகு தான் கோபி அதிர்ச்சியாகும் அளவிற்கு பாக்கியா பாயசத்தை போட்டுவிட்டார். அதாவது காபியை கொடுத்துவிட்டு உடம்பு எப்படி இருக்கு என்று பாக்கியா கேட்கிறார். அதற்கு கோபி இப்பொழுது நன்றாகவே தேறி வந்து விட்டேன் என்று சொல்கிறார். உடனே பாக்கியா, ரொம்ப சந்தோஷம் எப்பொழுது உங்க வீட்டுக்கு நீங்க கிளம்ப போறீங்க என்று கேட்டதும் கோபி அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.
சம்பந்தமே இல்லாத இடத்தில் எப்படி உங்களால் ஜாலியாக இங்கே இருக்க முடிகிறது. எதற்காக தேவையில்லாமல் ராதிகா இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் ஓடிக்கிட்டு இருக்கணும். உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம் தருவேன், அதுவரை தான் என்னாலையும் பொறுத்துக்க முடியும். அதுக்குள்ள நீங்களே இந்த வீட்டை விட்டு போக வேண்டும்.
அப்படி போகவில்லை என்றால் நானே உங்களை அனுப்பற மாதிரி ஆகிடும் என்று கோபி ஆசையை நொறுக்கும் அளவிற்கு பாக்கியா சரியான டிரீட்மென்ட் கொடுத்து விட்டார். இதை கொஞ்சம் கூட யோசிக்காத கோபி ஒரே நேரத்தில் இரண்டு பொண்டாட்டிகளுடன் இருந்துவிடலாம் என்று ஆசைப்பட்டார் போல, அதற்கு மொத்தமாக பாக்யா ஆப்பு வச்சு விட்டார்.
அது மட்டும் இல்லாமல் கோபியின் வக்கிர புத்தி தெரிந்து கொண்ட ராதிகாவும் அடுத்து கோபி எனக்கு வேண்டவே வேண்டாம் என்று குட் பாய் சொல்லிவிட்டு போகப் போகிறார். கடைசியில் யாரும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் அளவிற்கு கோபி புலம்பித் தவிக்கப் போகிறார். செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக கோபிக்கு கிடைத்த சரியான பாடம்.