Bhakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் கதை அடுத்து தற்போது நாடகத்தையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு மட்டமாக இருக்கிறது. அதாவது ராதிகா கர்ப்பமாகிவிட்டார் என்பதை உறுதிப்படுத்திய நிலையில் அதை நல்லபடியாக பெற்று எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் கோபி இந்த குழந்தை வேண்டாம் அபார்ஷன் பண்ணலாமா என்று சொல்கிறார். உடனே ராதிகா கோபத்துடன் கோபியிடம் பாக்யா கர்ப்பமாக இருக்கும் பொழுது நீங்க என்ன பண்ணி என்று கேட்கிறார். அதற்கு கோபி சந்தோஷத்தில் என்ன பண்ண வேண்டும் என்று தெரியாமல் தலைகால் புரியாமல் ஆடினேன் என்று சொல்கிறார்.
ராதிகா கோபியின் அட்ரஸ்சிட்டி
இதை கேட்ட ராதிகா, பாக்யா கர்ப்பமாக இருக்கும் பொழுது மட்டும் சந்தோசப்பட்ட நீங்க இப்ப நான் கர்ப்பமாக இருக்கேன்னு தெரிந்ததும் கலைக்க சொல்றீங்களா என்று திட்டுகிறார். ஆனால் ஒரு விஷயத்தை ராதிகா மறந்து விட்டார். பாக்கியா கர்ப்பமாக இருந்ததும் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருப்பதும் ஒன்று இல்லை.
இதே மாதிரி சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் என்ற படத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஆனால் அது கூட பார்ப்பதற்கு முகம் சுளிக்கவில்லை. ஆனால் இந்த நாடகத்தின் படி கோபிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி பேத்தி பேரன்கள் எல்லாம் வந்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் ராதிகாவுடன் இப்படி கூத்தடிப்பது பார்ப்பதற்கு சகிக்கவே இல்லை. இதனை தொடர்ந்து வீட்டில் அனைவருக்கும் இந்த ஒரு விஷயம் தெரிய வரப்போகிறது. அடுத்ததாக குடும்பத்துடன் சேர்ந்து ராதிகாவிற்கு வளைகாப்பு நடத்துவதற்கும் தயாராக போகிறார்கள். அதே மாதிரி அந்த வளைகாப்பு பங்க்ஷனில் கோபியின் முன்னாள் மனைவி பாக்கியா சமையல் ஆர்டரை எடுத்து சமைத்து கொடுக்கப் போகிறார்.