புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திரும்பத் திரும்ப ராதிகாவிடம் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி.. கெஞ்சி இனியாவை சேர்த்துவிட்ட பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிடம் காலேஜில் டீசி கொடுப்பதாக சொல்லி பெற்றோர்களை கூட்டிவரச் சொல்லி இருக்கிறார்கள். இதனால் பயந்து போன இனியா, பாக்யாவிடம் சொல்ல முடியாமல் கோபியை காலேஜில் வந்து பேச கூப்பிட்டு இருக்கிறார். கோபியும் நீ எதற்கும் பயப்படாத நான் வந்து பேசிக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும் இனியாவிற்கு இருந்த பயத்தினால் கோபிக்கு போன் பண்ணி நாளைக்கு வந்து விடுங்க டாடி என்று சொல்கிறார். அப்பொழுது கோபி நீ பயப்படாத நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இப்படி இவர்கள் போனில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா கேட்டு விடுகிறார். உடனே இனியாவிடம் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்கிறார். டாடி தான் எப்படி இருக்க சாப்டியா என்று போன் பண்ணி கேட்டார் என சொல்கிறார்.

ராதிகாவிடம் திட்டு வாங்கிய கோபி

அப்பொழுது பாக்கியா நாளைக்கு கண்டிப்பாக வந்து விடுங்கள் என்று சொல்கிறாய் எங்க என கேட்கிறார். இதை இனியா சமாளிக்கும் பொழுது பாக்யா எனக்கு எல்லாம் தெரியும். காலேஜில் பெற்றோர்களை வரச் சொல்லி இருக்கிறார்கள் அப்படித்தானே, அதற்கு தானே உங்க அப்பாவை கூப்பிட்டு இருக்கிறாய் என கேட்கிறார். உடனே இனியா ஆமாம் என்று சொல்கிறார்.

இது ஏன் என்னிடம் மறைக்கிறாய் என்று பாக்யா கேட்ட நிலையில், இனியா எனக்கு உங்களிடம் சொல்ல பயமாக இருந்தது. அதனால் தான் அப்பாவை வரச் சொன்னேன் என்று சொல்கிறார். இதில் பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல, பிள்ளைகளுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் முதலில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நிச்சயம் உங்களுக்கு உதவி பண்ணும் வகையில் தான் அம்மா நடந்து கொள்வார் என்று இனியாவிற்கு புரிய வைக்கிறார்.

அடுத்ததாக கோபி, ராதிகாவிற்கு மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு இனியா விஷயம் காலேஜுக்கு தெரிந்து விட்டது. அதனால் பெற்றோர்களை வந்து பேச சொல்லி இருக்கிறார்கள். நான் காலேஜுக்கு போகிறேன், நீயும் என் கூட வருவியா என்று கேட்கிறார். உடனே ராதிகா கொஞ்சம் கூட உங்களுக்கு வெக்கமா இல்லையா? எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் மறுபடியும் அவங்க முன்னாடி போய் நிக்கிறீங்க. என்னால எல்லாம் வர முடியாது என்று கோபியை அசிங்கப்படுத்தி ராதிகா பேசுகிறார்.

இதனை தொடர்ந்து மறுநாள் இனியாவை கூட்டிட்டு பாக்கியா காலேஜுக்கு கிளம்புகிறார். கிளம்பும் பொழுது ஈஸ்வரி மற்றும் தாத்தாவும் நாங்களும் வருகிறோம் என்று அனைவரும் சேர்ந்து காலேஜுக்கு போகிறார்கள். அங்கே கல்லூரியின் முதல்வர் இனியா செய்த காரியம் எங்க காலேஜுக்கு மிகப்பெரிய அவமானமாக வந்துவிட்டது. அதனால் இனியும் இங்கே இனியா படித்தால் மற்ற பெண்களும் தப்பு பண்றதுக்கு வாய்ப்பாக மாறிவிடும்.

அதனால் இனியாவிற்கு நாங்கள் டீசி கொடுக்கிறோம் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான பாக்கியா, நீங்கள் அப்படி பண்ணி விட்டீர்கள் என்றால் இனியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். தயவு செய்து இந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது. இனி நான் முழுமையாக பார்த்துக் கொள்கிறேன் என்று காலேஜில் கெஞ்சுகிறார். அதே மாதிரி ஈஸ்வரி பாட்டியும் பேத்திக்காக கெஞ்சுகிறார். கடைசியில் பாக்யா கேட்டுக் கொண்ட படி இனியாவை காலேஜில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News