செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சரத்குமாருக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த ராதிகா.. வைரலாகும் புகைப்படம்

Actor Sarathkumar: நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சரத்குமார், ராதிகா இருவருமே தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ஹீரோவாக பட்டையை கிளப்பிய சரத்குமார் இப்போது குணச்சித்திர கேரக்டர்களில் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்போது அவர் கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். இந்த சூழலில் இன்று அவர் தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Also read: கதையின் நாயகனாக அவதரித்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் கெட்டியாக பிடித்து வரிசை கட்டி இருக்கும் படங்கள்

இதற்கு திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அதில் அவருடைய மனைவி ராதிகாவும் இவருக்கு தன் வாழ்த்துக்களை கூறி ஸ்பெஷல் போட்டோ ஒன்றையும் தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டும் படியாக இருக்கும் அந்த போட்டோவில் ராதிகா, சரத்குமார் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுக்கிறார். மேலும் இந்த போட்டோவை வெளியிட்டுள்ள அவர் சிங்க இதயம் கொண்டவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: சரத்குமார் நடிப்பில் மறக்க முடியாத 5 கிராமத்து படங்கள்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்த சூர்யவம்சம்

உங்களுடைய விடாமுயற்சியும், வைராக்கியமும் வலிமையாகட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக வெளிவந்துள்ள இந்த போட்டோவை பார்த்த பலரும் காதலுக்கு வயது கிடையாது என்று இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த வயதிலும் சரத்குமார் இளைஞர் போல் இருக்கிறார் என்ற வியப்பையும் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் நாட்டாமை இன்று போல் என்றும் இளமையாக இருக்க வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.

நச்சுன்னு முத்தம் கொடுத்த ராதிகா

radikaa-sarathkumar
radikaa-sarathkumar

Trending News