Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வேண்டாம் என்று முடிவு எடுத்த ராதிகா கடைசி வரை எடுத்த முடிவு தெளிவாக இருந்ததால் கோபியை விவாகரத்து பண்ணி விட்டார். கோபியும் இனி கெஞ்சி பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்த நிலையில் ராதிகா என்ன சொன்னாலும் எனக்கு ஓகே என்ற நிலைமைக்கு வந்து விட்டார். பிறகு ராதிகா, கோபியிடம் கடைசியாக நான் உங்க வீட்டுக்கு வரலாமா என்னை கூட்டிட்டு போறீங்களா என்று கேட்கிறார்.
அதன்படி கோபி ராதிகா காரில் போய்க்கொண்டிருக்கிறார். அப்பொழுது கோபி, ராதிகாவிடம் உன்னை பிரிந்து நான் தனியாக இருப்பது ரொம்பவே கடினமானது. எப்படி இருக்க போகிறேன் என்று கூட தெரியவில்லை என்று புலம்புகிறார். அதற்கு ராதிகா எல்லாமே சரியாகிவிடும் இதுவும் கடந்து போய்விடும் என்று சொல்லி வீட்டிற்கு போகிறார். உங்களை ஒரு சந்தோஷமான இடத்தில் தான் விட்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.
உங்களுக்கும் உங்க வீடு தான் எல்லாமே, உங்க அம்மா உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க. அதனால் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பழகிக்கோங்க என்று அட்வைஸ் பண்ணிவிட்டு வீட்டிற்கு போகிறார். ராதிகா கோபி இருவரையும் சேர்ந்து பார்த்த ஈஸ்வரி மறுபடியும் இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்களோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.
ஈஸ்வரியின் பயத்தை புரிந்து கொண்ட ராதிகா நீங்கள் எதை நினைத்தும் பயப்பட வேண்டாம். நான் நிரந்தரமாக கோபியை விட்டு பிரிவதற்கு விவாகரத்து கிடைத்து விட்டது. அதனால் உங்க பையனை உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன், இதுவரை நான் செய்தது ஏதாவது உங்கள் மனசை கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார்.
உடனே ஈஸ்வரியும் எல்லா தவறும் என் மீது தான் இருக்கிறது, ஆனாலும் திடீரென்று பாக்கியவையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு கோபி உன்னை கல்யாணம் பண்ணியதால் எனக்கு கோபம் அதிகமாகி விட்டது. அந்த கோபத்தை எப்படி காட்டுவது என்று தெரியாமல் தான் உன்னை கஷ்டப்படுத்தி விட்டேன். அதனால் நீ என்னை மன்னித்துவிடு என்று ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறார். கோபி ராதிகா பிரிவதற்கு முக்கியமான காரணம் ஈஸ்வரி தான்.
தற்போது ராதிகாவிடமிருந்து கோபி பிரிந்து வந்த நிலையில் இப்போது மன்னிப்பு கேட்பது கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் பண்ணுவது போல் இருக்கிறது. அடுத்ததாக ராதிகா, பாக்யாவிடம் பேசிவிட்டு சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா சாப்பிட்டு கிளம்பட்டுமா என்று கேட்கிறார். உடனே ராதிகா ஈஸ்வரி கோபி இனியா என அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிடுகிறார்கள்.
அப்பொழுது ராதிகாவை தவிர எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில் ராதிகா எப்பொழுதுமே நீங்கள் சாப்பிடும் போது அனைவரும் சிரித்து பேசிக் கொண்டுதான் சாப்பிடுவீர்கள். அதை பார்க்கும் பொழுது எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட்டு பேசணும் என்று ஆசை இருந்தது. ஆனால் ஏன் இப்பொழுது எல்லோரும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று ராதிகா சொல்கிறார். கடைசியில் கோபி வாழ்க்கையை விட்டு கிளம்ப நினைக்கும் ராதிகாவுக்கு பாக்யா விருந்து சமைத்துக் கொடுத்துவிட்டார்.
ஆனால் கோபியை வேண்டாம் என்று தலைமுழுகிய நிலையில் பாக்கியத்தலையில் இடி விழுந்தது போல் கோபி பாக்கியா உடன் வீட்டில் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இருந்தாலும் இந்த பாக்கிய எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பது கோபி செய்த தவறுகள் அனைத்தையும் மறந்து மன்னித்தது போலும் அமைந்துவிடுகிறது. ஒன்னு இல்லன்னா இன்னொன்னு என்பதற்கு ஏற்ப பாக்கியா வேண்டாம் என்று ராதிகாவுடன் போனார். தற்போது ராதிகா இல்லை என்று தெரிந்ததும் பாக்கியவுடன் தஞ்சம் அடைகிறார்.