செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கோபியை உசுப்பேத்தி ரணகளப்படுத்தும் ராதிகா.. பாவம் வலிக்காத மாதிரி எவ்வளவு தான் தாங்குவார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரை காமெடி ட்ராக்கில் போய்க்கொண்டிருந்தது. அடுத்து காரசாரமாக நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. அதாவது ஒரே மாதிரியாக பார்த்தால் போர் அடித்து விடும் என்பதற்காக மாத்தி கதையை கொண்டு வருகிறாராம். அதற்காக போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு மறுபடியும் முதலில் இருந்தா அப்படி சொல்வதற்கு ஏற்ப இருக்கிறது.

இப்பொழுது தான் கோபி கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியாவின் அருமையை புரிந்து கொண்டு அவரிடம் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு வந்தது. அதற்குள் இதை கெடுக்கும் விதமாக ராதிகா அவருடைய கொளுத்தி போடும் வேலையை ஆரம்பித்து விட்டார். எப்பொழுது ஒரு பிரச்சனை ஆரம்பிக்கும் அதை வைத்து பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கு லட்டு மாதிரி ஒரு பிரச்சனை கிடைத்து விட்டது.

Also read: தூங்கு மூஞ்சி அருணை விட கரிகாலன் எவ்வளவோ பெட்டர்.. குணசேகரன் கையில் கிடைத்தால் கொத்துக்கறி தான்

ராதிகாவை கொஞ்சம் கூட பிடிக்காத கோபியின் அம்மா எப்பொழுதும் இவர்கள் இருவரும் எலியும் பூனைமாக தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கோபியின் அம்மா, ராதிகாவை பார்த்து கோபியை எங்ககிட்ட இருந்து எடுத்துக்கிட்ட மாதிரி இந்த வீட்டையும் எடுத்துக்கலாமா என்று நினைக்கிறாயா என கேட்கிறார். அதற்கு ஆவேசமாக ராதிகா பதிலுக்கு பதில் பேசுகிறார்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாக்கியா எரிமலையாக வெடிக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த கோபியிடம், ராதிகா இது என்னுடைய வீடு இல்லையா என்று கேட்கிறார்.
உடனே கோபியும் இது உன்னுடைய வீடு ராதிகா என்று வாய் கூசாமல் சொல்கிறார்.

Also read: தனத்துக்கு இப்படி ஒரு நோயா?. அதிர்ச்சியில் உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதை கேட்டு நம்ம பாக்கியா சும்மா இருப்பாங்களா? இந்த வீடு என் வீடு என்று சொல்ல அதற்கு ராதிகா உங்களுக்கு இங்கு இருக்கவே உரிமையில்ல என்று போலீஸ் சொல்லிவிட்டார்கள். மறந்துட்டா பாக்கியா மேடம் என்று நக்கலாக சொல்கிறார். அதற்கு கோபி மீதமுள்ள 18 லட்ச ரூபாய் இன்னும் கொடுக்கவில்லை என்று சொல்ல, உடனே பாக்கியா இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த பணத்தையும் உங்க மூஞ்சில் தூக்கி வீசுகிறேன்.

அதன் பின் நீங்கள் உங்க குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே போகணும் என்று சவால் விடுகிறார். இதைக் கேட்ட கோபி எவ்வளவு தான் வலிக்காத மாதிரி நானும் தாங்குவேன் என்று ரியாக்ஷன் கொடுக்கிறார். மொத்தத்தில் கோபியை உசுப்பேத்தி குளிர்காயும் வேலையை ராதிகா நல்லாவே செய்து வருகிறார்.

Also read: குணசேகரன் உடம்பில் ஊறிப்போன நக்கல் நையாண்டி பேச்சு.. ட்ரெண்டிங் ஆகும் காமெடி வசனங்கள்

Trending News