1980 களின் படங்கள் என்றாலும் பாடல்கள் என்றாலும் எவர்கிரீன் படங்கள், பாடல்களாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. எண்பதுகளில் கதாநாயகிகள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பவர்கள்.
அம்பிகா, ராதா, ராதிகா, ஊர்வசி, அமலா, குஷ்பூ, ரேவதி, சுகாசினி உள்ளிட்ட பல நடிகைகளை இன்றும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மேலும் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகைகளாக தங்களுடைய திரைப்பட பயணத்தை தொடர்கின்றனர்.
மிராக்கிள் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும், “ஜேம்ஸ் வசந்தன்” எழுதி, இசையமைத்து, இயக்கும் திரைப்படத்தில் 80s கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர். இத்திரைப்படம் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும். இதில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஓ அந்த நாட்கள் என்ற திரைப்பட மும்மொழிகளில் வெளிவர போவதாக செய்திகள் கிடைத்துள்ளன. இத்திரைப்படம் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இந்த திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஓ அந்த நாட்கள் திரைப்படத்தைப் போலவே தெலுங்கில் 1980களின் நடிகைகள் சங்கமம் நிகழுகிறது.

கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இணைகிறார்கள் ராஷ்மிகா, சர்வானந்த் ஆகியவர்களுடன் கதாநாயகிகள் கைகோர்த்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பட போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதை கண்டு திக்குமுக்காடி உள்ளனர் . கோவிட் காரணமாக படப்பிடிப்பு காலதாமதமாகி தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.