புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சொர்ணா அக்காவை மிஞ்சிய ராதிகா.. பிள்ளை பூச்சியாக வேடிக்கை பார்க்கும் பாக்யா கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டு பொண்டாட்டி வைத்து சமாளிக்க முடியாமல் தினந்தோறும் அக்கப்போர்தனம் பண்ணும் கோபி. ஒரே தெருவில் இருந்து பாக்யாவை கஷ்டப்படுத்த வேண்டும் என்று வந்த கோபி கடைசியில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கோபி செய்த அழிச்சாட்டியத்தினால் ராதிகா தற்போது கோபியின் வீட்டிற்கு வந்து ஆட்டம் போடுகிறார். இதை அங்கு இருப்பவர்கள் எவ்வளவு தடுத்துப் பார்த்தும் ராதிகாவை சமாளிக்க முடியவில்லை.

ராதிகாவின் செயல்கள் சொர்ணாக்காவை மிஞ்சும் அளவிற்கு அலப்பறையை பண்ணிக்கிட்டு இருக்கிறார். இதை தட்டிக் கேட்டு துணிச்சலுடன் பேச வேண்டிய பாக்கியா வாயை மூடி அமைதியாக வேடிக்கை பார்ப்பதன் ரொம்பவே எரிச்சலாக இருக்கிறது. ஆனாலும் ராதிகாவிற்கு இவர்தான் சரியான ஆளு என்று பதிலடி கொடுத்து வருகிறார் செல்வி மற்றும் கோபியின் அம்மா.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

ஒவ்வொரு நாளும் பாக்கியாவின் மாமியாரிடமிருந்து ராதிகா அசிங்கப்பட்டு தான் இருக்கிறார். ஆனாலும் கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் அந்த வீட்டுக்கு என்னமோ இவர்தான் ஓனர் மாதிரி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஒன்றும் செய்ய முடியாது மாதிரி கோபியின் நிலைமை இருக்கிறது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டானே என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வருகிறார்.

பாக்கியாவின் வீட்டிற்குள் அடாவடித்தனமாக நுழைந்த ராதிகா தற்போது சமையலறையிலும் ராஜ்ஜியம் செய்ய நினைக்கிறார். இதை தடுப்பதற்கு பாக்கியாவால் மட்டும் தான் முடியும். ஆனால் அவர் என்னமோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. எனக்கு கொஞ்சம் சாப்பாடு கொடுத்து படுக்க இடம் கொடுத்தால் போதும் என்கிற மாதிரி அவருடைய நடவடிக்கை இருக்கிறது.

Also read: சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று நினைப்பது தப்பு இல்லை. ஆனால் அதற்கு இடையூறாக நம் வாழ்க்கையில் வருபவர்களை வேடிக்கை பார்ப்பது தான் தப்பு. அடுத்ததாக ராதிகா என்ன சொன்னாலும் அது சரிதான் என்று தலையாட்டி பொம்மை மாதிரி இருக்கிறார் நம்முடைய கோபி.

தற்போது இந்த நாடகத்தை பார்ப்பவர்களுடைய ஒரே ஆசை. ராதிகாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கியா வாயே திறந்து பேசினால் மட்டும்தான் விறுவிறுப்பாகவும், பார்ப்பதற்கு ஆவலாக இருக்கும் என்று அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இனிமேலாவது கோபியை பாசிட்டிவாக கொண்டு போனால் நன்றாக இருக்கும். அதனால் தான் என்னமோ இவர் இந்த சீரியலில் இருந்து விலகுகிறார்.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

- Advertisement -

Trending News