வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அடிக்க கை ஓங்கிய ராதிகா.. சிக்கி சீரழிந்த புஷ்பா புருஷன்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தந்தை கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்றதால், இனியாகவும் அவருடன் சேர்ந்து தற்போது தங்கி இருக்கிறார். இந்த நிலையில் பள்ளியில் வந்த இனியா போனை அதிக நேரம் ஆக பயன்படுத்தியதால் ராதிகா அவரை படிக்க சொல்கிறார்.

இருப்பினும் அதை துளி கூட கண்டுகொள்ளாத இனியா ராதிகாவை மிகவும் அலட்சியப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் கோபத்தில் ராதிகா போனை புடிங்கி தூக்கி விட்டு எறிகிறார். உடனே இனியா முன்பு பிளான் போட்டபடி ராதிகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சோகத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார்.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

அதன் பிறகு இனியாவை அடிக்க கை ஓங்கிய ராதிகாவை கையைப் பிடித்து தடுக்கிறார். பிறகு கோபி வந்ததும் இனியா நடந்ததை அனைத்தையும் சொல்லி, ராதிகா தன்னை அடிக்க கை ஓங்கிதையும் தெரியப்படுத்துகிறார். இதைக் கேட்டதும் கோபியும் ராதிகாவிடம் கோபத்தில், ‘எதற்காக அடிக்க கை ஓங்கினாய்!’ என்று திட்டுகிறார்.

மரியாதை இல்லாமல் கொண்ட இனியாவை கண்டிக்காமல் என்னை வந்து கண்டிக்கிறீர்களே! என்று ராதிகாவும் கோபியை விலாசுகிறார். இப்படி 2-வது திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருக்க நினைத்த கோபியை பாக்யாவின் மகள் இனியா ஒவ்வொரு நாளும் பலவிதத்தில் டார்ச்சர் செய்து வருகிறார்.

Also Read: இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்

அது மட்டுமல்ல கோபியிடம் ‘இது நம்முடைய வீடு அல்ல வாங்க அப்பா! நம்ம வீட்டுக்கு போலாம்’ என்று அடிக்கடி சொல்லி கோபியை பாக்யா உடன் சேர்த்து வைக்கும் அவருடைய வாரிசு ஆன இனியா பக்கா பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் அடிக்கடி இனியாவிற்கும் ராதிகாவிற்கும் சக்காளத்தி சண்டையை விட மோசமான சண்டை ஒவ்வொரு நாளும் ஏற்படுவதால், இதற்கிடையில் கோபி தான் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து அதே வீட்டில் இருக்கும் கோபியின் தந்தை குளிர் காய்கிறார்.

Also Read: டைட்டில் வின்னர் இவர்தான்.. ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என விமர்சித்த சீசன் 6 போட்டியாளர்

Trending News