தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர் மற்றும் நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான போலி கணக்குகள் உருவாகியுள்ளன. இதனை பார்த்த நடிகர்கள் பலரும் போலி கணக்குகளை உருவாக்கிய நபர்களை கடுமையாக திட்டி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ளனர். அதற்கு காரணம் படங்களின் தகவல்களை பற்றி வெளிப்படையாக ரசிகர்களிடம் கூறுவதற்கும், ரசிகர்களுடன் என் நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சில நடிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளனர்.
ஆனால் ஒரு சில நடிகர்கள் இன்றுவரை எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துக் கொள்ளாமல் உள்ளனர் .அதில் நடிகர் அஜித் மற்றும் மணிரத்னம் போன்ற சிலரும் இடம்பிடித்துள்ளனர். சமீபத்தில் மணிரத்தினம் பிறந்தநாள் அன்று டுவிட்டர் கணக்கை இணைவதாக தகவல் ஒன்றை வெளியிட்டனர்.
அதனால் பல ரசிகர்களும் அந்த கணக்கை பின்தொடர்ந்தனர். இதனை பார்த்து கோபமடைந்த சுகாசினி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக மணிரத்னம் அவர்கள் எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் இல்லை அது ஒரு போலியான கணக்கு என கூறி அதனை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
இதனை பார்த்த ராதிகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உலகம் எது எதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மூளை இல்லாதவர்கள் மற்றும் வேலையற்றவர்களை பார்க்க முடிகிறது. முட்டாள் தனமாக வேலை செய்பவர்களை நான் பார்க்கிறேன் இனிமேல் என் நேரத்தையும், சக்தியையும் யாருக்காகவும் வீணாக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட துல்கர் சல்மான் அவரது சமூக வலைதள பக்கத்தில் போலியாக தனது பெயரில் வைத்திருந்த கணக்குகளை வெளிப்படையாக போலி கணக்குகள் என அறிவித்தார்.