திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வரலட்சுமியை நம்பி பிரயோஜனம் இல்லை.. ராதிகா-சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!

90களில் தமிழ் சினிமாவின் முரட்டு நடிகராக சுமார் 136 படங்களுக்கு மேல் நடித்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும், நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த பிறகுதான் இவர் ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.

தொடர்ந்து வில்லி மற்றும் முக்கிய கேரக்டரில் தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, மாரி 2, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த வரலட்சுமி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்துகிறார்.

இதனால் அவர் சென்னையை காலி செய்து விட்டு ஹைதராபாத்தில் குடியேறும் முடிவுக்கும் வந்து விட்டார். தமிழ் படங்களை விட டோலிவுட்டுக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், ராதிகா-சரத்குமார் இருவரும் தங்களுடைய அடுத்த வாரிசை தமிழ் சினிமாவில் நுழைய வைக்க மும்முரமாக செயல்படுகின்றனர்.

ராதிகாவின் மகன் ராகுல் சிங்கப்பூரில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு, ஊர் திரும்புவதால் அவர் மீது திரையுலகின் பார்வை கணிசமாக விழுகிறது. அவரை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் அடுத்த வருடமே களமிறக்க தூண்டிவிடுகின்றனர்.

இதற்காகவே ராதிகா-சரத்குமார் பெரிய இயக்குனர்களின் கையில் தங்களுடைய மகனின் முதல் படத்தை ஒப்படைக்க உள்ளனர். இவர்களது முதல் தேர்வாக மணிரத்தினம் இருக்கிறார். ஆகையால் மணிரத்தினம் ராகுலுக்கு ஏற்றாற்போல் ஒரு கதையை முதலில் உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே கார்த்திக், ராதா உள்ளிட்டோரின் வாரிசுகளை முதல் முதலாக இயங்கியது போல, இவரையும் இயக்கி சினிமாவில் நுழைவதற்கு பிள்ளையார் சுழி போடுவாரா என ராதிகா சரத்குமார் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Trending News