புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இனியாவை காப்பாற்றி பாக்யாவிற்கு செக் வைத்த ராதிகா.. கோபி செய்த தவறால் அல்லல்படப் போகும் ஈஸ்வரி குடும்பம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோபி மற்றும் பாக்கியா இருவருக்கு இடையே சமையல் போட்டி நிகழ்ச்சி மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் எப்படியும் பாக்யா தான் ஜெயிக்கப் போகிறார். ஆனால் இதற்கு இடையில் இனியா செய்த அலப்பறையால் பாக்யாவின் வெற்றி கேள்விக்குறியாக இருக்கிறது.

அதாவது இனியா பிரண்ட்ஸுடன் சேர்ந்து டிஸ்கோ நடக்கும் இடத்திற்கு போயிருக்கிறார். அங்கே ஏற்பட்ட சில சச்சரவால் போலீஸ் அங்கே போயிருக்கிறார்கள். போன இடத்தில் விசாரிக்காமல் இவர்கள் குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள் என்று நினைத்து அங்கு இருக்கும் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக தயாராகி விட்டார்கள்.

போலீஸிடம் இருந்து இனியாவை காப்பாற்றிய ராதிகா

அப்பொழுது அந்த டிஸ்கோ பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் இருந்து ராதிகா அவருடைய தோழியுடன் பேசிக்கொண்டு வெளியே வருகிறார். பின்பு பேசிவிட்டு வீட்டிற்கு போகும் ராதிகா, இனியா போலீஸிடம் கெஞ்சி கொண்டிருப்பதை பார்க்கிறார். பார்த்ததும் அதிர்ச்சியான ராதிகா அங்கு போய் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். பயத்தில் இருந்த இனியா, ராதிகாவை பார்த்ததும் என்னை காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்.

அப்பொழுது நடந்ததை விசாரித்த ராதிகா, போலீஸிடம் இனியா அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. எனக்கு வேண்டிய பொண்ணு தான். தயவு செய்து போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போயி பெரிய பிரச்சினையாக ஆக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத போலீஸ் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்றுகிறார்கள்.

இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று ராதிகா, தெரிஞ்ச மேலதிகாரியிடம் பேசி போலீசுக்கு போன் பண்ணி இனியா பிரண்ட்ஸ்களை விட சொல்லிவிட்டார். உடனே போலீசும் வார்னிங் கொடுத்துவிட்டு அங்கு இருந்து கிளம்பி விடுகிறார்கள். பிறகு ராதிகா, இனியாவை தனியாக கூப்பிட்டு திட்டி பிரண்ட்ஸ்களையும் இப்படி பண்ணுவது தப்பு என்று தெரியாதா? நீங்கள் இங்கே வந்திருப்பது உங்களுடைய பெற்றோர்களுக்கு தெரியுமா?

உங்களை நம்பி தான வெளியிலே விடுகிறார்கள், அந்த வகையில் நீங்கள் எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பொறுப்பான அம்மா ஸ்தானத்தில் இருந்து அனைவருக்கும் அறிவுரை கொடுக்கிறார். அந்த நேரத்தில் இனியாவிற்கு செழியன் போன் பண்ணுகிறார். அந்த போனை ராதிகா வாங்கி லொகேஷன் அனுப்பி வைக்கிறேன் அந்த இடத்திற்கு வா என்று கூப்பிடுகிறார்.

அங்கே வந்த செழியனுக்கு ரொம்பவே அதிர்ச்சியாகவும் புரியாத புதிராகவும் இருந்தது. பிறகு ராதிகா நடந்த விஷயத்தை சொல்லிய நிலையில் இனியாவை திட்டி ராதிகாவிற்கு நன்றி சொல்கிறார். அத்துடன் இனியாவை கையைப் பிடித்து செழியன் வீட்டிற்கு கூட்டிட்டு போக பார்க்கிறார். ஆனால் ராதிகா, இனியா கையை பிடித்துக் கொண்டு விடுவதற்கு மறுக்கிறார்.

இங்கே இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது. நான் எப்படி அவ்வளவு சாதாரணமாக விட்டு விடுவேன். உங்க அம்மாக்கு போன் பண்ணி இந்த இடத்திற்கு வர சொல்லு என்று செக் வைக்கிறார். எதுக்கெடுத்தாலும் ஓவராக பேசும் பாக்கியா ஒரு பிள்ளையே சரியாக வளர்ப்பதில் கோட்டையை விட்டு இருக்கிறார். அதை புரிய வைக்கும் விதமாக ராதிகா, பாக்கியாவிற்கு ஆட்டம் காண்பிக்கப் போகிறார்.

கண்டிப்பாக இந்த பிரச்சனை இதோடு முடிய போவதில்லை, இது கோபிக்கு தெரிந்துவிடும். அதே மாதிரி பாக்கியா குடும்பத்துக்கும் தெரிந்த நிலையில் இதனால் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்க போகிறது. அந்த வகையில் கோபியை போல தான் இனியா என்பதற்கு ஏற்ப என்ன பண்ணுகிறோம் என்று தெரியாத அளவிற்கு கண்மூடித்தனமாக தவறுகளை செய்து வருகிறார். இதனால் கடைசி வரை ஈஸ்வரி குடும்பம் அல்லல்பட்டு தவிக்கப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News