Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமாவுலகையே புரட்டிப் போட்டு விட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் இந்த பிரச்சனையை பற்றி தான் பேச்சு. பாதிக்கப்பட்ட நடிகைகள், குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்கள் ஒரு பக்கம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் பொதுவான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். மலையாள சினிமா என்பதை தாண்டி தற்போது இந்த அலை தென்னிந்திய சினிமாவில் அடிக்க தொடங்கி இருக்கிறது.
தமிழ் சினிமாலையும் மீ டூ பிரச்சனை இருக்கு
ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சமந்தா மற்றும் நடிகை அமலா தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற கமிட்டி அமைக்க வேண்டும் என பேசி இருந்தார்கள். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போல் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என ராதிகா சரத்குமார் குரல் கொடுத்திருக்கிறார்.
1980 களிலிருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது. பெரிய ஹீரோக்கள் எல்லாம் இதை பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். தப்பு செய்யும் ஆண்களை தான் நம் சமூகத்தில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் பெரிய ஹீரோக்களின் மௌனம் தவறானது. கேரவனில் கேமரா ஒழித்து வைத்ததைப் பற்றி நான் எந்த புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால்தான் என்னை விசாரிப்பார்கள். நான் என்ன நடந்தது என்று விளக்கம் தான் கொடுத்திருக்கிறேன்.
இது போன்ற ஒரு பிரச்சனை என்னுடைய சக நடிகைக்கு வந்த போது நான் தலையிட்டு அதை தீர்த்து வைத்திருக்கிறேன் என ராதிகா பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவிலும் மீ டூ பிரச்சனை இருக்கிறது என ராதிகா பேசியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெயர் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
ஒரு வேளை கமிட்டி வைத்து நடிகர்கள் பெயர்கள் வெளியில் வர ஆரம்பித்தால் தமிழ் சினிமாவும் ஆட்டம் கண்டுவிடும். ஒரு வேளை நாட்டாமை பொண்டாட்டி இந்த விஷயத்தில் அனகோண்டா நடிகர் மாட்டுவார் என்று தெரிந்திருந்துதான் கமிட்டி கேட்கிறார் என சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை
- ரியாஸ்கான் மீது மலையாள நடிகை கொடுத்த புகார்
- முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்
- கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் நடிகை