புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈஸ்வரியை பார்த்து அலறி அடித்து ஓடி ஒளிஞ்ச ராதிகா.. பாக்கியாவிடம் சிக்கி தவிக்கப் போகும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா குடும்பத்தை கதற விட வேண்டும் என்பதற்காக ராதிகா அம்மா பிளான் பண்ணி ஈஸ்வரியை மாட்டி விட்டார். ராதிகாவிற்கு பாதுகாப்பு இல்லை, குழந்தையை கலைத்து கொலை முயற்சி செய்த மாமியாரை நீங்கள் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் என்று கம்ப்ளைன்ட் கொடுத்தார்.

இன்னொரு பக்கம் ராதிகாவும், ராதிகாவின் அம்மாவும் கோபி வீட்டில் வரப்போகும் பிரச்சினையை கைகொட்டி நின்னு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று வாசலிலே நின்னு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் வீட்டிற்கு போன கோபி, வழக்கம் போல் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கிறார்.

அம்மா பேச்சை கேட்டு வாழ்க்கை வீணாக்கிய ராதிகா

அடுத்ததாக பாக்கியா வீட்டிற்கு போலீஸ் ஜிப் வந்துவிட்டது. அங்கு இருந்து இறங்கிய போலீஸ் நேரடியாக வீட்டிற்குள் நுழைந்து ஈஸ்வரியை பற்றி விசாரித்து ராதிகாவின் அம்மா கொடுத்த கம்பளைண்ட் படி அரெஸ்ட் பண்ணி ஜிபில் கூட்டிட்டு போகிறார்கள். ஆனால் பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் போலீசிடம் கெஞ்சுகிறார்கள்.

ஆனால் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத போலீஸ், ஈஸ்வரியை கூட்டிட்டு போய்விட்டது. இதை கண் குளிர நின்னு ராதிகாவின் அம்மா வேடிக்கை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் ராதிகா ஈஸ்வரியின் நிலைமையை பார்க்க முடியாமல் அலறி அடித்து ஓடி ஒளிந்து விடுகிறார்.

அடுத்து அந்தப் பக்கமாக வந்த கோபி என்ன போலீஸ் ஜீப் வந்துட்டு போகுது என்று எழிலிடம் கேட்கிறார். உடனே தாத்தா, எல்லாம் உன்னால தான் வந்தது. எப்படி இருந்த ஈஸ்வரியை இப்படி ஆக்கிட்டியே. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என்று சாபம் விட்டு கோபியை அடிக்கிறார்.

இது எதுவும் புரியாத கோபி என்னாச்சு என்று கேட்க இனியா, பாட்டியை போலீஸ் கூட்டிட்டு போய் விட்டார்கள். குழந்தையை கொன்னதாகவும் ராதிகாவை கொலை முயற்சி செய்ததாகவும் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார்கள் என சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியாகி கோபி நிற்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாக்கியா, எப்படியாவது மாமியாரை வெளியே எடுக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கப் போகிறார். அதன்படி முதலில் ராதிகாவின் குழந்தை எப்படி கலைந்தது என்பதை ஈஸ்வரிடம் கேட்டு தெரிந்து அதற்கு தகுந்த ஆதாரங்களை திரட்ட போகிறார். அப்பொழுது ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று ராதிகாவுக்கு தெரிய வரப் போகிறது.

ஆனாலும் கோபி இனி ராதிகாவுடன் வாழ விருப்பமில்லை என்ற முடிவை எடுக்கப் போகிறார். இருந்தாலும் இவ்வளவு பிரச்சனையும் அவமானமும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த கோபி தான். அதனால் இனி பாக்யாவிடம் சிக்கி தவிக்கப் போகிறார். கடைசியில் கோபி, பாக்கியாவும் இல்லாமல் ராதிகாவும் இல்லாமல் பித்து பிடித்தது போல் அலையப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News