வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரெண்டு பொண்டாட்டி இருந்தும் சந்தோஷம் இல்லாமல் தவிக்கும் கோபி.. ராதிகா பாக்கியாவிற்கு செய்யும் சூழ்ச்சி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் காமெடி மற்றும் ராதிகாவின் வில்லத்தனமான சூழ்ச்சி இருக்கப் போகிறது. அதாவது கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக கல்யாண ஆர்டர் வேலையை பார்ப்பதற்காக பாக்கியா அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் அது ராதிகாவின் உறவினர் திருமணம் என்பதால் கோபியை கூட்டிக்கொண்டு அதே திருமணத்திற்கு அவர்களும் வருகிறார்கள். அப்பொழுது கோபி ரொம்ப நாளைக்கு அப்புறம் ராதிகாவுடன் தனியாக இருக்கப் போகின்றோம் என்று நினைத்து குஷியில் ரொமான்ஸ் மூடுக்கு போய்விடுகிறார்.

Also read: தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல.. சாகப் போற நேரத்துல வளைகாப்பு கேக்குதா!

மேலும் இதே திருமணத்தில் கோபி, பழனிச்சாமியை பார்க்கிறார். அப்பொழுது ஒருவேளை கல்யாணத்துக்கு கெஸ்ட் ஆக வந்திருப்பார் என்று நினைக்கிறார். அடுத்ததாக கோபி நல்லவேளை பாக்கியா இங்கே இல்லை என்று நினைத்து ராதிகாவுடன் ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா போன் பேசிக்கிட்டே வெளியில் வந்து நிற்கிறார். அப்பொழுது அங்கு வந்த செல்வி அக்காவை ராதிகா பார்க்கிறார். அதே மாதிரி செல்வி அக்காவும் ராதிகாவைப் பார்த்து இருவரும் ஷாக் ஆகி விடுகிறார்கள்.

Also read: நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சக்தி.. குணசேகரன் முன் வாய்சவடால் விட்டு டம்மியாக நிற்கும் ஜனனி

உடனே கோபமாக ராதிகா, கோபியிடம் நான் உங்க வீட்டு வேலைக்காரியை பார்த்தேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டதும் ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிறார். ஏன் இவர் இந்த அளவுக்கு பதறுகிறார் என்று யோசித்த பொழுது தான் தெரிகிறது . பழனிச்சாமியும் செல்வியும் இங்கே தான் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக பாக்கியாவும் இங்கே தான் இருக்க வேண்டும் என்று புலம்புகிறார்.

இது என்ன கூத்தா இருக்கிறது என்று தெரியவில்லை இவர் மட்டும் இவருடைய வாழ்க்கையை இஷ்டப்படி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இவர் வேண்டாம் என்று ஒதுக்கிய பாக்கியா மட்டும் சந்தோசமாக இருந்துவிடக் கூடாது. இது என்ன சார் நியாயம்? அடுத்ததாக இந்த கல்யாண ஆர்டரை பாக்கியா நல்லபடியாக செய்து விடக்கூடாது என்று ராதிகா ஏதாவது தில்லாலங்கடி வேலையை பண்ணி கெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Also read: டிஆர்பியில் அதிரடி காட்டும் விஜய் டிவி.. எதிர்நீச்சலால் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி

Trending News