வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் சக்காளத்தி.. கோபியின் மகன்களின் வாழ்க்கையை சரி செய்யப் போகும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் செழியன், ஜெனிக்கு செய்த துரோகம் வெட்ட வெளிச்சமாக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் ஜெனி, நான் காதலித்து கல்யாணம் பண்ணின என்னுடைய செழியன் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணி விட்டார் என்ற கோபத்தில் வீட்டை விட்டு போய்விட்டார். ஜெனி போகும் போது ராதிகா அவரை பார்த்து விடுகிறார்.

பார்த்ததும் ஜெனி ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அவரை காரில் அழைத்து அவருடைய அம்மா வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுகிறார். அதன் பின் பாக்யா வீட்டில் செழியன் பண்ணின தவறை யாரும் கண்டிக்காமல் பாக்கியாவின் மாமியார் மற்றும் கோபி இவர்கள் இருவரும் பாக்கியா மீது தான் தப்பு இருக்கிறது என்பது போல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

இதை பார்த்த ராதிகா ஆவேசமாக வீட்டுக்குள் நுழைந்து பாக்யாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். யாரு தப்பு செய்தாரோ அவரை தண்டிக்காமல் பாக்கியா மீது குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும். பாக்கியா செழியன் இடம் ஜெனிக்கு துரோகம் பண்ணு என்று சொன்னாரா. எல்லா தப்பையும் செழியன் மீது இருக்கிறது. அவரை யாரும் கண்டிக்காமல் பாக்யாவை குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று கேட்கிறார்.

Also read: கோபியிடம் இருந்து பொண்டாட்டியை பிரித்த மாமியார்.. வயிற்றெரிச்சல் படும் ராதிகா

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். ஆனாலும் இந்த மாமியார் மட்டும் பாக்கியாவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக அமிர்தா கணேசன் விஷயங்கள் தெரிந்தால் இன்னும் என்னென்ன பூகம்பமெல்லாம் வெடிக்கப் போகிறது.

இந்த விஷயமும் தற்போது வரை பாக்யாவிற்கு மட்டும்தான் தெரியும். அதனால் கூடிய விரைவில் இதற்கு பாக்யா ஒரு முடிவு கட்டினால் அட்லீஸ்ட் எழில் வாழ்க்கையாவது சந்தோசமாக அமையும். அடுத்ததாக ஜெனி விஷயத்தில் ராதிகா உள்ளே நுழைந்து செழியன் வாழ்க்கையை காப்பாற்றப் போகிறார். இதனை தொடர்ந்து பாக்யாவிற்கு பக்கபலமாக இருக்கப் போவது ராதிகா தான்.

கடைசி வரை இந்த கோபி வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து பாக்யாவை குறை சொல்வதே வேலையாக வைத்துக் கொண்டு வருகிறார். இத்தனை வருஷமாக பாக்யா கூட இருந்தும் அவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் சுயநலமாக சிந்தித்து மோசமாக கோபியின் அம்மா நடந்து கொள்கிறார். இதையெல்லாம் தாண்டி பாக்கியா எப்படி மகன்களின் வாழ்க்கையை காப்பாற்ற போகிறார் என்பதுதான் மீதமுள்ள கதை ஆகும்.

Also read: குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்துக்கு முடிவு கட்டிய அப்பத்தா.. மொத்த பிளானையும் சொதப்பிய தோழர்

Trending News