செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புருஷனை இறுக்கிப் பிடித்த மனைவி.. கொடூரமான வில்லியாக மாறிய ராதிகா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு கோபி ராதிகாவை திருமணம் செய்துவிட்டார். இதைக் கேட்டதும் பதறியடித்து குடும்பம், மண்டபத்தில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக விரைந்து வருகிறது. ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே திருமணம் நடந்து முடிகிறது.

ராதிகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதை பார்த்ததும் கோபியின் அம்மா ஈஸ்வரி பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் சாபமிடுகிறார். பாக்யா உன்னைப்பற்றி நன்றாக தான் புரிந்து வைத்து விவாகரத்து கொடுத்திருக்கிறார், இவ்வளவு நாள் பாக்யாவை எதிரியாக நினைத்த கோபியின் அம்மா தற்போது கோபியின் கீழ்த்தரமான செயலை பார்த்து நொறுங்கிப் போனார்.

Also Read: கள்ளத்தொடர்பால் கர்ப்பிணி மனைவியை அடித்த கணவன்.. சீரியலை விட மோசமான நிஜ வாழ்க்கை

மேலும் கோபியின் மகள் இனியா கண்முன்பே கோபி, ராதிகாவின் மகள் மயூவுக்கு முத்தம் கொடுத்தது இனியாவால் தாங்கிக் கொள்ளும் முடியவில்லை. இதனால் அப்பாவை தூக்கி எறியும் அளவுக்கு இனியா வந்துவிடுகிறார். இருப்பினும் இனியாவை சமாதானப்படுத்த முயற்சிக்கும் கோபியை பார்த்து ராதிகா முறைகிறார்.

கேடுகெட்ட கல்யாணத்தை செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து விடுவாயா நிச்சயம் நாசமாக தான் போய்விடுவாய் என்று ஈஸ்வரி ஆத்திரத்தில் ராதிகா-கோபியின் திருமணத்தை சபிக்கிறார். இதையெல்லாம் கேட்டதும் தாங்கிக் கொள்ள முடியாமல் ராதிகா, புருஷன் கோபியை தீண்டி விடுகிறார். உடனே கோபியும் ஈஸ்வரியை சமாதானப்படுத்த பார்க்கிறார் ஆனால் அவரை திட்டவில்லை.

Also Read: புஷ்பா புருஷனான கோபி.. பதறியடித்துக்கொண்டு கல்யாணத்தை நிறுத்த வந்த வாரிசு

பிறகு ராதிகா ஆத்திரத்தில் கோபியை திட்டிவிட்டு மேடையிலிருந்து இறங்குகிறார். பின் ஈஸ்வரியை பாக்யா சமாதனப்படுத்தி அழைத்து செல்கிறார். அப்போது கோபியின் முன்பு ஈஸ்வரி தன்னுடைய மருமகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கு நாங்கள் இருக்கிறோம். இனி நீ எங்களுக்கு தேவையில்லை, எங்களுக்கு மகனே இல்லை என நினைத்துக் கொள்கிறேன் என்று கடுஞ்சொற்களால் கோபியை திட்டிவிட்டு கிளம்புகிறார்.

அதன்பின் ராதிகாவை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்கு செல்லும் கோபி, இனி இந்த மண்டபத்தில் என்னால் அசிங்கப்பட முடியாது என ராதிகா கிளம்ப முடிவெடுக்கிறார். அப்போது மண்டபத்தில் இருந்து வெளியே போகும் போது பாக்யாவை பார்த்த ராதிகா, புருஷன் கையில் இறுக்கமாக பிடித்து அவரை வெறுப்பேற்றுகிறார். இனிதான் சீரியலில் ராதிகா கொடூரமான வில்லியாக மாறி தன்னுடைய நிஜ முகத்தை காட்டப் போகிறார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலே சூடுபிடிக்க போகிறது.

Also Read: 50 வயதில் ஹனிமூன் சென்ற கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்

Trending News