சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஈஸ்வரியை விரட்ட கோபியிடம் தூபம் போடும் ராதிகா.. சம்மந்தியை வச்சு செய்யும் பாக்கியாவின் மாமியார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி வந்ததில் ராதிகா மற்றும் அவருடைய அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் ஈஸ்வரி வந்து சும்மா இல்லாமல் ஓவராக அதிகாரம் பண்ணி அராஜகம் செய்து வருவதால் வீட்டை விட்டு எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று ராதிகாவின் அம்மா நினைக்கிறார்.

அதே மாதிரி ராதிகாவுக்கும் ஈஸ்வரி வந்தது பிடிக்கவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து கோபிக்கு தூபம் போடுகிறார்கள். அதாவது உங்க அம்மா பாலைக் குட்டி விட்டு அதை கிளீன் பண்ணாம எங்களை வேலைக்காரி மாதிரி வேலை வாங்குகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எங்க குடும்பத்தில் என்ன சாப்பாடு பழக்கவழக்கங்கள் இருக்கிறதோ அதை தான் நாங்கள் பண்ண முடியும்.

ஈஸ்வரியை டார்ச்சர் பண்ண போகும் ராதிகாவின் அம்மா

உங்க அம்மாவுக்காக எங்களை மாற்றிக் கொள்ள முடியாது. அதனால் அவர்கள் எங்க வீட்டில் இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் குழப்பங்களும் தான் வரும். அடிக்கடி ராதிகாவிடம் குழந்தையை கலைத்திடு என்று சொல்வது நல்லா இல்லை. இதே மாதிரி சொல்லிக் கொண்டே வந்தார்கள் என்றால் உங்க அம்மா மீது நான் போலீஸ் கம்ப்ளைன்ட பண்ணி விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் பயந்து போன கோபி இனி அம்மாவால் எந்த பிரச்சனையும் வராது. அவர்களுக்கு தேவையான எல்லா வேலையும் நானே பார்த்துக்கொள்கிறேன். அதனால் கோபப்படாமல் பொறுமையாக இருங்கள் என்று கோபி சொல்கிறார். இதை எல்லாம் பார்த்த ராதிகா இந்த தொந்தரவு வேண்டாம் என்றுதான் உங்க அம்மாவை வெளியே அனுப்புங்க என்று சொல்கிறேன் எனக் கூறுகிறார்.

அதற்கு கோபி, நான் தான் அம்மாவை கெஞ்சி என்னுடன் கூட்டிட்டு வந்தேன். இப்பொழுது எப்படி நானே போங்க என்று சொல்ல முடியும். அதனால் அம்மா என்னுடைய தான் இருப்பார்கள். தயவு செய்து இந்த பேச்சை இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கோபி ராதிகாவிடம் கண்டிஷனாக கூறிவிட்டார். பிறகு ராதிகா அம்மா, ஈஸ்வரியே இந்த வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும்படி நான் வைக்கிறேன் என்று ராதிகாவிடம் சொல்கிறார்.

உடனே ராதிகா தேவையில்லாமல் பிரச்சினை வந்து விட வேண்டாம் பார்த்துக்கொள் என்று கூறுகிறார். ஆக மொத்தத்தில் இனிதான் ஈஸ்வரிக்கு பாக்கியாவின் அருமையை உணர்த்தும் வகையில் ராதிகாவின் அம்மா வச்சு செய்யப் போகிறார். கடைசியில் கோபிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு பாக்யாவுடன் தஞ்சம் அடையப்போகிறார்.

Trending News