வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோபிக்கு சாதகமாக மாறிய ராதிகா.. பழனிச்சாமி சொன்னதால் உஷாரான பாக்யா, அட்வைஸ் பண்ணிய எழில்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா தன்னுடைய காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் பண்ணுவார். அதனால் தான் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள ஈஸ்வரி மற்றும் பாக்கியா அனுமதி கொடுக்காததால் கோபியிடம் போய் பெர்மிஷன் கேட்டார். ஆனாலும் பாக்கியா மற்றும் ஈஸ்வரி மறுப்பு தெரிவித்ததால் இவர்களை சமரசம் செய்து பெர்மிஷன் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக எழிலை வீட்டுக்கு வர வைத்து விட்டார்.

எதுவுமே தெரியாத போல் வீட்டிற்கு வந்த எழில், பாக்கியம் மற்றும் ஈஸ்வரிடம் பேசி இனியாவிற்கு சாதகமாக போட்டியில் கலந்து கொள்வதற்கு பெர்மிஷன் வாங்கி கொடுத்து விட்டார். அடுத்ததாக எழில், ஈஸ்வரியை பார்த்து தனியாக பேசிக் கொள்கிறார். அப்பொழுது தாத்தா இல்லாததால் எனக்கு இந்த வீட்டில் மரியாதை இல்லாமல் போய்விட்டது என்று கவலையுடன் புலம்புகிறார்.

நினைத்த காரியத்தை சாதித்த இனியா

உடனே எழில் என்னாச்சு ஏன் பாட்டி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்.? உங்களுக்கு எப்போதுமே மதிப்பு மரியாதை உண்டு. நீங்கள்தான் எங்களுடைய சொத்து என்று எழில் சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி, இனியாவை ஏன் உங்க அப்பாவை பார்த்து பேசினாய் என்று கேட்டேன். உடனே இனியா உங்களுக்கு தேவை என்றால் நான் பேசணும். நீங்க பேச கூடாதுன்னு சொன்னா நான் கேட்கணுமா என்று எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

அது மட்டும் இல்லாமல் செழியன், அவர் எங்களுக்கு அப்பாதான அவரிடம் பேச எங்களுக்கு உரிமை இல்லையா என்று என்னிடம் கேள்வி கேட்கிறான் என்று ஈஸ்வரி எழிலிடம் சொல்லி ஃபீல் பண்ணுகிறார். உடனே எழில் அவங்க அந்த அர்த்தத்தில் உங்களிடம் பேசி இருக்க மாட்டார்கள். நீங்கள் அதையெல்லாம் நினைத்து தவறாக புரிந்து கவலைப்பட வேண்டாம்.

எப்போதுமே உங்களுடைய சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் என்று ஈஸ்வரி மனதை தேற்றுகிறார். இதனை தொடர்ந்து ஈஸ்வரி, இனியா காலேஜுக்கு போகும் பொழுது ராதிகாவின் கமலா அவமானப்படுத்தி பேசுகிறார். இதை கேள்விப்பட்ட பாக்கியா, ராதிகாவை சந்தித்து அவங்க அம்மா பண்ணினதுக்கு மொத்த கோபத்தையும் காட்டி திட்டி விடுகிறார்.

இதனால் பாக்யாவிடம் அவமானப்பட்ட ராதிகா, பாக்யாவிற்கு எதிராக சதி செய்ய வேண்டும் என்ற முறையில் கோபிக்கு சாதகமாக மாறப் போகிறார். அடுத்ததாக பாக்யாவின் ஹோட்டலில் வேலை பார்க்கும் கோபியின் நபர் அவருடைய இஷ்டத்துக்கு சில முடிவுகளை எடுக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் ஏற்கனவே பழனிச்சாமி, பாக்யாவிடம் என்னதான் அந்த செஃப் வேலை பார்த்தாலும் நீங்கள் சொல்லுவதை கேட்கும் படி உங்க கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படி பாக்கியா, ஹோட்டலுக்கு வந்த செஃப்புவிடம் கொஞ்சம் கரராக பேசி நான் சொல்லுற வேலையை மட்டும் பார்த்தால் போதும். தேவையில்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று சொல்லி உஷாராகி விடுகிறார். அடுத்ததாக ஈஸ்வரி புலம்பியதால் எழில், இனிய மற்றும் செழியனுக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடுத்து பாட்டி இருக்கும் நிலைமையில் நாம் கொஞ்சம் அனுசரணையாக போக வேண்டும். அவர்கள் மனதை புண்படுத்தும் படி நாம் எதுவும் பேசிட கூடாது. அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று அட்வைஸ் கொடுத்துட்டு வீட்டுக்கு போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News