திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கோபியை தலைமுழுகிய ராதிகா.. பாக்யாவிற்கு ஆரம்பித்த ஏழரை நாட்டுசனி, கொண்டாட்டத்தில் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா நமக்கு இணையானவள் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக கோபி, பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை தேடி கல்யாணம் பண்ணிக் கொண்டார். ஆனால் அப்படி பண்ணிய பொழுது பாக்கியா பெரிசாக கவலைப்படாமல் தைரியமாக இருந்ததற்கு முக்கிய காரணம் பாக்யாவிற்கு பக்க பலமாக ஒட்டுமொத்த குடும்பமும் தன்னம்பிக்கை கொடுத்து வந்தார்கள்.

இந்த ஒரு காரணத்தினால் பாக்கியா அவருடைய சொந்த காலில் நின்னு வெற்றி பெற வேண்டும் என்று போராட தொடங்கினார். ஆனால் அதன் பின் ராதிகா மற்றும் கோபி சந்தோஷமாக இருந்த நாட்கள் குறைவு தான் என்று சொல்லும் அளவிற்கு கோபி, பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றி வந்தார். தற்போது கோபி திருந்திய பிறகு தன்னுடைய குடும்பம் பிள்ளைகள் அம்மா என்று செண்டிமெண்டாக பேசி பாக்கியா வீட்டிலேயே குடி புகுந்து விட்டார்.

அதே நேரத்தில் ராதிகாவையும் விட்டுவிடாமல் ராதிகா மற்றும் மயூவையும் கூடவே கூட்டிட்டு வந்தார். வந்த பிறகும் ராதிகாவின் மனநிலை மற்றும் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியாத ஒரு சுயநலமாக தான் கோபி இருந்தார். இதனால் இந்த கோபி நமக்கு ஒத்து வராது என்று முடிவு பண்ணிய ராதிகா, கோபியை விட்டு பிரிந்து விடலாம் என முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் போகும் பொழுது கோபியுடன் சந்தோஷமான ஒரு தருணத்தை ஏற்படுத்தி விட்டு போகலாம் என்பதற்காக ராதிகா குடும்பத்தை கூட்டிட்டு ரெசார்ட் போக பிளான் பண்ணினார். அதன்படி கடற்கரை, ஹோட்டல் என எல்லா பக்கமும் ராதிகா கோபி பாக்யா மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் சென்று சந்தோஷத்தை கொண்டாடி வந்தார்கள்.

பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் ராதிகா அனைவரும் இருக்கும்பொழுது பாக்கியா கொடுத்த 10 நாள் கெடு முடிய போகிறது. அதனால் நாம் இந்த வீட்டை விட்டு நாளைக்கு கிளம்பிடனும் கோபி என்று சொல்லிவிட்டார். இதை கேட்டதும் இனியா ஈஸ்வரி அதிர்ச்சியாகி கோபியிடம் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் என கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள்.

கோபி இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்த நிலையில் ராதிகா மற்றும் மயூ பெட்டி படுக்கையை எடுத்துவிட்டு கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பிறகு கோபி நானும் வருகிறேன் என்று கிளம்பிய நிலையில் ராதிகா, வேண்டாம் கோபி இந்த வீட்டை விட்டு நானும் மயூ தான் போகப் போகிறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இந்த வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி இனியாவிடம் உங்க அப்பாவை திருப்பி உங்களிடம் கொடுத்து விட்டேன்.

இனி நீ நெனச்சபடி உங்க அப்பா உடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று இனியாவிடம் சொல்லிவிட்டு மயூவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். எல்லா சூழ்நிலையிலும் ராதிகா தான் பாவமாக நின்று இருக்கிறார். ஆனால் தற்போது எடுத்த முடிவு நிச்சயம் ராதிகாவிற்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. ஆனால் கோபி, ராதிகாவை கல்யாணம் பண்ணும் பொழுது வேண்டாம் என்று ஒட்டுமொத்த குடும்பமும் தடுத்து செண்டிமெண்டாக பேசினார்கள்.

அப்பொழுதெல்லாம் குடும்பம் மகள் அம்மா என்று அசராமல் ராதிகா கழுத்தில் கோபி தாலி கட்டினார். தற்போது ராதிகாவுடன் வாழ்ந்த பிறகு பாக்யா பெஸ்ட் என்று தோன்றியதும் அப்படியே அந்தர்பல்டி அடித்து விட்டார். இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப கோபி தன்னுடைய இருக்கப் போகிறார் என்ற சந்தோஷத்தை ஈஸ்வரி கொண்டாடப் போகிறார். ஆனால் பாவம் எல்லா பாரமும் பாக்கிய தலையில் விழுந்துவிட்டது என்பதற்கு ஏற்ப இனி பாக்கியவை சுற்றி ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கப் போகிறது.

Trending News