வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2ம் திருமணத்திற்கு நாள் குறிக்க துடிக்கும் ராதிகா.. வெறியான பாக்யா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி, தன்னை ராதிகா எப்படியாவது வீட்டுக்குள் சேர்த்துக் கொள்வார் என ஹோட்டலில் தங்கி இருக்கிறார். மறுபுறம் குடும்ப பொறுப்புகளை எல்லாம் சுமக்கும் பாக்யா இனியாவின் கல்வி கட்டணத்திற்கு தன்னுடைய வளையலை அடகு வைத்து, பணத்தை கட்ட பள்ளிக்கு செல்கிறார்.

ஆனால் கோபி இனியாவிற்கான ஸ்கூல் பீஸ்சை கட்டி விடுகிறார். பிறகு வீட்டிற்கு வரும் பாக்யாவிற்கு கோபி தொலைபேசியின் மூலம் அழைத்து,’ பணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். ஆனால் நீ எல்லாம் யாரையாவது ஒட்டிக்கிட்டு சார்ந்து வாழ்வதற்கு தான் லாயக்கு’ என்று படு கேவலமாக பேசி பாக்யாவை சீண்டி விடுகிறார்.

Also Read: ஸ்கூல் பீஸ் கூட கட்ட துப்பில்ல, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி

அதன்பிறகு பாக்யா, இனிமேல் குடும்பத்திற்கான பண பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மசாலா பொடி அரைத்தும், கேரியர் சாப்பாடு கட்டிக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது. இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டரிங் தொழிலை விரிவுபடுத்த நினைக்கிறார்.

அப்பொழுதுதான் பணம் நிறைய சம்பாதித்து குடும்பத்தை சமாளிக்க முடியும் என்று பாக்யா முடிவெடுத்து வெறி கொண்டு கிளம்புகிறார். அதற்காக தன்னுடைய வளையலை அடகு வைத்த பணத்தை பயன்படுத்த திட்டமிடுகிறார். அதேசமயம் கோபி இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டியதை கோபியின் அம்மா ஈஸ்வரி பெருமையாக பேசுகிறார்.

Also Read: கோபியுடன் சேர்ந்து கூட்டு களவாணியான வாரிசு

இந்த குடும்பத்தின் மீது கோபிக்கு அக்கறை இருக்கிறது என்பதை  மறுபடியும் நிரூபித்து காட்டியிருக்கிறான் பாரு என்று தன்னுடைய மகனை தலையில் தூக்கி வைத்து ஈஸ்வரி பேசுகிறார். அவர் மட்டுமல்ல ராதிகாவின் அண்ணா, அம்மா இருவரும், ‘பாக்யா கோபியை தூக்கி எறிந்தாலும் அவருடைய பொறுப்பில் இருந்து விலகாமல் இருக்கிறார்.

ஆகையால் கோபியை 2வது திருமணம் செய்து கொள் ராதிகா’ என்று ராதிகாவின் அண்ணன் ஏத்தி விடுகிறார். ஆனால் ராதிகா இந்த சூழலில் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. சில நாள் அவகாசம் தேவைப்படுகிறது. அதன் பிறகுதான் கோபியை திருமணம் செய்து கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ராதிகா சொல்கிறார். ராதிகாவிற்கு கோபியை திருமணம் செய்து கொள்வதில் தான் குழப்பம் இருக்கிறது. ஆனால் கோபியுடன் சேர்ந்து வாழ்வதில் மட்டும் அவர் தெளிவாக இருக்கிறார்.

Also Read: பாக்கியா உன்னால எவ்வளவு தான் நான் அசிங்கப்படுறது

Trending News