புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈஸ்வரியை காப்பற்ற பாக்கியாவுக்கு உதவும் ராதிகாவின் மகள்.. கோபியின் மாமியாருக்கு சங்கு ஊத போகும் ஆதாரம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் அம்மா செய்த சதியில் ஈஸ்வரி மாட்டிக் கொண்டதால் பாக்யாவின் குடும்பம் இக்கட்டான சூழலில் தவித்து வருகிறது. அந்த வகையில் ஈஸ்வரிக்கு எதிராக ராதிகா சாட்சி சொல்லியது மட்டுமில்லாமல் கோபியும், அம்மா குழந்தையை கலைக்க சொன்னது உண்மைதான் என்று சொல்லிவிட்டார்.

அதனால் ஈஸ்வரி மீது கொடுத்த கம்ப்ளைன்ட் சரிதான் என்று உறுதியாகி நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவு வந்துவிட்டது. இதற்கிடையில் விவாகரத்து ஆன பிறகும் பாக்கியா அந்த வீட்டில் இருந்து மாமனார் மாமியாரை பார்த்து வந்ததிலும் தவறு என்பது மாறி கோர்ட்டில் லாயர் வாதாடி விட்டார்.
அதனால் ஈஸ்வரிக்கு எதிராக அனைத்து சாட்சியங்களும் திரும்பிவிட்டது.

கேள்விக்குறியாக போகும் ராதிகாவின் வாழ்க்கை

இந்த அதிர்ச்சி தாங்கிக் கொள்ளாத தாத்தா, ஈஸ்வரியை நினைத்து ரொம்பவே மனவேதனையில் அழுது புலம்புகிறார். இவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் பாக்கியா நிலைகுலைந்து போய் நிற்கிறார். இதனால் உச்சகட்ட கோபத்தில் பாக்யா, உங்களுக்கெல்லாம் மனசாட்சி மூளை என்று ஏதாவது இருக்கிறதா?

அத்தை எப்படிப்பட்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா என்று ராதிகாவிடம் கேட்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா, பாக்யாவை நக்கல் அடித்து பேசுகிறார். உடனே ராதிகா என் குழந்தை இல்லாமல் ஆக்கினது அவங்க தான். அதனால் செய்த தப்புக்கு தண்டனை வேண்டும் என்று திமிராக பேசுகிறார். இதையெல்லாம் பார்த்த கோபி, என்ன செய்வது அம்மாவை எப்படி வெளியே கூட்டிட்டு வருவது என்று தெரியாமல் முழித்து தவிக்கிறார்.

ஒரு பக்கம் ஈஸ்வரி ஜெயிலுக்குள் இருந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் பொண்டாட்டி நினைத்து தாத்தா மனவேதனையில் தவிக்கிறார். இவர்களை எல்லாம் எப்படி பழைய நிலைமைக்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று தெரியாமல் பாக்கியா இருக்கிறார். ஆனால் இந்த சமயத்தில் தான் பாக்யாவிற்கு ஒரு ஆதாரம் கிடைக்கிறது.

அதுவும் ராதிகாவின் மகள் மூலமாக அந்த வீடியோ பாக்கியா கையில் கிடைக்கப் போகிறது. ராதிகாவும் ஈஸ்வரியும் எதார்த்தமாக பேசிக் கொண்ட நிலையில் ராதிகா திரும்பும் பொழுது பூச்செடி மிதித்து தான் கீழே விழுகிறார் என்பது ராதிகாவின் அம்மாவிற்கும் நன்றாக தெரியும். ஆனால் தெரிந்தும் இந்த ஒரு விஷயத்தை வைத்து பாக்கியா மற்றும் ஈஸ்வரியை பழிவாங்க வேண்டும் என்று ராதிகாவின் அம்மா பிளான் பண்ணி விட்டார்.

ஆனால் இதை தடுக்கும் பொறுப்பாக அந்த நேரத்தில் கையில் போன் வைத்துக் கொண்டிருந்த மயூ இதை எதர்ச்சியாக வீடியோ எடுத்து விடுகிறார். அதை பார்த்த மயூ சரியான நேரத்தில் பாக்யாவிடம் கொடுத்து விடுகிறார். அப்பொழுது கோர்ட்டில் மறுபடியும் இந்த கேஸ் விஷயம் வரும் பொழுது சரியாக அந்த ஆதாரத்தை பாக்கியா கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்.

இதன் மூலம் ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று தெரிய வரப்போகிறது. அத்துடன் தன்னுடைய அம்மா செய்த சூழ்ச்சியால் இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டோம் என்று ராதிகா, அம்மாவிடம் சண்டை போடப் போகிறார். அம்மாவின் பேச்சை கேட்டுக் கொண்டு ஆடி ஆட்டத்திற்கு கோபி, ராதிகாவை விட்டு விலகப் போகிறார். கடைசியில் கமலா செய்த சதியால் ராதிகாவின் வாழ்க்கை கேள்விக்குறியாக போகப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News