திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் தர்ஷனுக்கு ஜோடியாக வரும் ராதிகாவின் மகள்.. விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு தாவிய வாரிசு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வரவேண்டும். அதற்கு வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று போஸ்டர் பெரியசாமி ஜெயிலில் வைத்து குணசேகரன் இடம் கூறினார். அந்த வகையில் போஸ்டர் பெரியசாமியின் இளைய மகள் அன்புகரசியை குணசேகரனின் மகன் தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் சம்மந்தியாகிவிடலாம்.

அத்துடன் என்னுடைய சொத்துக்கும் மொத்த வாரிசு உங்களுடைய பையன் தர்ஷன் ஆகத்தான் இருப்பான் என்று சொல்லியதால் குணசேகரன் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் நிச்சயதார்த்தத்தை நடத்துவதற்கு போஸ்டர் பெரியசாமியின் மூத்த மகள் அறிவுக்கரசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று குணசேகரன் விட்டு நான்கு மருமகளும் முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் முதல் முயற்சியாக போஸ்டர் பெரியசாமி வீட்டிற்கு சென்று இந்த கல்யாணம் வேண்டாம் நிறுத்தி விடுங்கள் என்று சொல்லிப் பார்க்கலாம் என ஈஸ்வரி மற்றும் நந்தினி வீட்டுக்கு போய் விட்டார்கள். அங்கே போனதும் போஸ்டர் பெரியசாமி மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சந்தித்து பேசுகிறார்கள். அந்த வகையில் போஸ்டர் பெரியசாமியின் இளைய மகள் அன்புக்கரசியையும் கூப்பிட்டு பேச வேண்டும் என்று நந்தினி ஈஸ்வரி சொல்கிறார்கள்.

உடனே அன்புக்கரசியை கூட்டிட்டு வந்து காட்டுகிறார்கள். அந்தப் பொண்ணு யார் என்றால் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து வரும் மயூ. இவர்தான் தர்ஷனுக்கு ஜோடியாக தற்போது என்டரி கொடுத்திருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போவதால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் டாட்டா காட்டிவிட்டு தற்போது சன் டிவிக்கு தாவிய நிலையில் ஹிட் சீரியலாக போய்க் கொண்டிருக்கும் எதிர்நீச்சலில் கமிட் ஆகிவிட்டார்.

Trending News