Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை விட்டு ராதிகாவை பிரிக்க வேண்டும் என்று நினைத்து மறைமுகமாக பல தில்லாலங்கடி வேலைகளை ஈஸ்வரி பார்த்து வருகிறார். அதனால் செழியன் இனியா கோபியை கூப்பிட்டு நாம் அனைவரும் விளையாடலாம் என்று சொல்லி செஸ் விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படி விளையாடும் பொழுது ரொம்பவே சந்தோசமாகவும் கலகலப்பாக சிரித்து பேசிக்கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.
இதனைப் பார்த்த பாக்கியா சந்தோசப்பட்டாலும் ராதிகாவுக்கு கடுப்பாகி வருகிறது. அதிலும் ஈஸ்வரி, கோபியுடன் விளையாடும் பொழுது ராதிகாவை பார்த்து முறைத்துக் கொண்டே ஏளனமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார். இதனை பார்த்து மிகவும் கோபப்பட்ட ராதிகா எதுவும் பேச முடியாமல் ரூமுக்குள் போய்விடுகிறார். அடுத்ததாக பாக்யா, எல்லோருக்கும் சமைத்த நிலையில் மயுக்கும் பிடித்த சாப்பாடை சமைத்து வைத்திருக்கிறேன் என்று மயுவிடம் சொல்லி அக்கறையாக பாக்கிய பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் எழில் மற்றும் அமிர்தா வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து பேசின நிலையில் கோபியும் அங்கே வந்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒட்டு மொத்த குடும்பமாக பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ராதிகா வந்ததும் இவர்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக ஆகிவிட்டார்கள் என்ற நினைப்பில் மயூவை கூட்டிட்டு ரூம்குள் போய்விடுகிறார்.
அடுத்ததாக பாக்யா மற்றும் மயூ ரூம்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ராதிகா வந்து இன்னைக்கு ஒருநாள் மயூ என்னுடன் தூங்கிக் கொள்ளட்டும் என்று சொல்லி கூப்பிடுகிறார். ஆனால் மயூ நான் வரவில்லை, இவங்க கூட தூங்கிக் கொள்கிறேன் என்று பாக்கியா விட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ராதிகா எதுவும் பேச முடியாமல் போய்விடுகிறார்.
பிறகு நேரம் ஆகியும் கோபி வரவில்லை என்று கீழே போய் பார்க்கப் போகிறார். அப்பொழுது கோபி ஈஸ்வரி இனிய மற்றும் செழியன் அனைவரும் சேர்ந்து சந்தோஷமாக படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த ராதிகா எதுவும் பேச முடியாமல் தண்ணீர் குடிக்க போய் விடுகிறார். ராதிகாவை பார்த்ததும் கோபி எழுந்து போய் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காத.
நான் படம் பார்த்து முடித்துவிட்டு தான் வருவேன் நீ போய் தூங்கி விடு என்று சொல்கிறார். உடனே ரூமுக்குள் வந்த ராதிகா யாருமே இல்லாமல் தனியாக இருக்கிறோமே என்று பீல் பண்ண ஆரம்பித்து விடுகிறார். இப்படியே போனால் மயூவும் நம்மை விட்டு பாக்யா பக்கம் சாய்ந்து விடுவாளோ, என்ற பயம் வந்துவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி பாக்கியா, மயூ மீது பாசத்தை கொட்டுகிறார். இதெல்லாம் எங்க போய் முடியப் போகிறதோ என்று ராதிகா நினைக்க ஆரம்பித்து விட்டார்.
ஈஸ்வரியும் ராதிகாவிடமிருந்து கோபியை பிரிக்க வேண்டும் என்பதற்காக கோபியை தனியாக விடாமல் எந்நேரமும் கூடவே ஒட்டிக்கொண்டு கோபி மனசில் ராதிகாவை நினைக்காத படி ஏதாவது ஒரு டிராமாவை பண்ணிக் கொண்டே வருகிறார். இதனால் கோபி, அம்மா மற்றும் பிள்ளைகள் கூட அதிக நேரம் செலவழிக்கும் படியாக அமைந்து விடுகிறது. இதற்கு பிறகும் இந்த கோபியை நம்புவது வேஸ்ட் என்பதற்கு ஏற்ப ராதிகா முடிவெடுக்க போகிறார்.