Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்பொழுது கோபிக்கு உதவி செய்யும் வகையில் பாக்கியா ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்து காப்பாற்றி விட்டார். இதனால் கோபி மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் அளவிற்கு பாக்கியா மீது கரிசனம் வந்துவிட்டது. உடனே இதுதான் சான்ஸ் என்று ஈஸ்வரியும், கோபி மனதை மாற்றும் அளவிற்கு பேசி தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போய்விட்டார்.
ஆனால் கோபியை நம்பி ராதிகா ஏமாந்து போய் நிற்கிறார். இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் உடம்பு சரியானதும் நம்முடன் வந்து விடுவார் என்று நினைக்கிறார். இதற்கிடையில் பாக்யா வீட்டில் இருக்கும் கோபி, இனி எந்த காரணத்தைக் கொண்டும் பாக்யாவிற்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்.
இந்த சமயத்தில் பாக்கியாவின் ஹோட்டலில் ஒரு கல்யாண ஆர்டர் வருகிறது அதை எப்படி பண்ணலாம் என்று வீட்டில் இருப்பவர்களிடம் பாக்கியா டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட கோபி, இந்த விஷயத்திற்கு ஐடியா கொடுக்கும் விதமாக தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து பாக்கியாவிடம் நல்ல பெயர் சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்.
அடுத்ததாக பாக்யா நடை பயிற்சி போய்க்கொண்டிருக்கும் பொழுது அதே இடத்திற்கு கோபியும் வருகிறார். அப்பொழுது பாக்கியாவிடம் கோபி மனம் விட்டு பேசுகிறார். இதை தூரத்திலிருந்து பார்த்த ராதிகா, மனசு நொந்து போய் எதுவும் பேசாமல் வீட்டிற்கு திரும்பி போய் விடுகிறார். கோபி பாக்கியாவிடம் சொல்வது என்னவென்றால் நீ இவ்வளவு திறமைசாலியாகவும் அறிவாளியாகவும் இருப்பாய் என்று நான் நினைச்சு கூட பார்க்கவே இல்லை.
இது எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தால் உன்னை விட்டு நான் போயிருக்கவே மாட்டேன். நான் தப்பு பண்ணிட்டேன் பாக்கியா என்று சொல்லி பாக்யா பின்னாடி அலையும் அளவிற்கு கோபி ஒரு புது டிராக்கை கொண்டு வருகிறார். இதை கேட்ட பாக்கியா இதோடு உங்க பேச்சை நிப்பாட்டிக்கோங்க, தேவை இல்லாமல் உங்களை ஏன் தான் காப்பாற்றினனோ என்று யோசிக்கும்படி வச்சிராதீங்க என சொல்லி போய்விட்டார்.
இதனை அடுத்து கோபியை பார்ப்பதற்கு பாக்யா வீட்டிற்கு ராதிகா வருகிறார். அப்படி கோபி, ராதிகாவிடம் பேசும் பொழுது நான் பாக்கியாவை பழி வாங்க வேண்டும் என்று ஹோட்டலில் கலப்படத்தை உண்டாக்கியது மிகப்பெரிய தப்பு. நான் பாக்யாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று பாக்யாவை பற்றி புராணமாக பேசி ராதிகா தன்னுடைய மனைவி என்பதை மறந்து முதல் மனைவியை தேடும் அளவிற்கு கோபி அலைய ஆரம்பித்து விட்டார்.
பாவம் இதில் இரண்டு பேரும் மாட்டிக் கொண்டு முழிப்பது போல கோபியிடம் சிக்கிக் கொண்டு ராதிகா மற்றும் பாக்யா தவிக்கிறார்கள். பாக்யா பிடிக்காமல் ராதிகா பின்னாடி போன கோபி, தற்போது ராதிகாவை விட பாக்யா பெஸ்ட் என்று பாக்கியாவுடன் வாழ ஆசை வந்துவிட்டது போல.