வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அபியை சந்தேகப்பட்ட ராகவுக்கு தெரியவரும் உண்மை.. கையும் களவுமாக மாட்டப் போகும் கிருஷ்ணா

Nee Naan Kadhal Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில், அபியை காதலித்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று ராகவ் ஆசைப்பட்டார். ஆனால் அபிக்கு வேற ஒருவருடன் திருமணம் கைகூடிய தருணத்தில் கிருஷ்ணா அதை கெடுக்கும் விதமாக பல சதிகளை செய்தார். இதனால் அபி கல்யாணம் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த நேரத்தில் ராகவன் பாட்டி அபி கழுத்தில் தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினார்.

அதனால் ராகவ், வேண்டாம் வெறுப்பாக தான் தாலி கட்டினார். ஏனென்றால் தாலி கட்டுவதற்கு முதல் நாள் தான் கிருஷ்ணா அபி உடன் நடந்து கொண்ட விஷயத்தை ராகவ் பார்த்தார். அதனால் அபியை தவறாக நினைத்துக் கொண்டார். இருந்தாலும் தன்னுடைய அக்காவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும், பாட்டி சொல்வதையும் கேட்க வேண்டும் என்பதால் ராகவ், அபி கழுத்தில் தாலி கட்டிக் கொண்டார்.

இதை எல்லாம் மனதில் வைத்த ராகவ், கல்யாணம் முடிந்த கையுடன் அபியிடம் போட்ட கண்டிஷன் என்னவென்றால் 8 மாதம் வரை தான் நீயும் நானும் ஒன்றாக இருக்கணும். அதுவரை நாம் இருவரும் கணவன் மனைவியாக நடித்து குடும்பத்தில் இருப்பவர்களை ஏமாற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். எதற்காக இந்த கண்டிஷன் என்று தெரியாமலேயே அபியும், ராகவ் சொன்னதற்கு தலையாட்டினார்.

இதற்கிடையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம் அபி தான் என்று ராகவ் தவறாக புரிந்து கொண்டு தீர விசாரிக்காமல் அபி மீது பழி சுமத்தினார். அப்படித்தானே அஞ்சலி வளைகாப்பு நடக்கும் சமயத்தில் சாப்பிட்ட உணவால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அஞ்சலிக்கு பிரச்சினையாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிவிட்டார். இதற்கு காரணம் அபி கொடுத்த பாயசம் தான் என்று ராகவன் சித்தி சொன்னதால் ராகவ் அபியை திட்டிவிட்டார்.

இதனால் கோபமான அபி, யாரிடமும் சொல்லாமல் அஞ்சலி நல்லபடியாக குணமாகி வரவேண்டும் என்று கோவிலில் பிரார்த்தனை பண்ணினார். அப்பொழுது அஞ்சலிக்கு தேவையான ரத்தம் அபியால் தான் கொடுக்க முடியும் என்பதை தெரிந்து கொண்ட அபி ஹாஸ்பிடலுக்கு வந்து அஞ்சலிக்கு தேவையான ரத்தத்தை கொடுத்துவிட்டு வெளியே கிளம்பி விட்டார். பிறகு எந்த பிரச்சினையும் இல்லாமல் அஞ்சலி சுயநினைவுக்கு வந்த பிறகு அபி பற்றி கேட்டார்.

இப்பொழுது ராகவ், திட்டி அனுப்பிவிட்டார் என்று தெரிந்த நிலையில் அஞ்சலி, அபியை இப்போது கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்கிறார். உடனே அபியை தேடி ராகவ் போகிறார். அப்படி இருவரும் சந்தித்த பொழுது ராகவ், அபியை வீட்டுக்கு கூப்பிடுகிறார். அதற்கு அபி என்னால் உங்க கூட உங்க வீட்டுக்கு வர முடியாது என்று கோபத்துடன் சொல்கிறார்.

என் மீது கொலை பழியை போடும் அளவிற்கு கேவலமா என்று நினைத்துவிட்டீர்களா? அஞ்சலி அக்காவிற்கு நான் கெடுதல் பண்ணி என்ன சாதிக்கப் போகிறேன் என்று கேட்கிறார். அதற்கு ராகவ் நீ எந்த துரோகத்தையும் செய்ய துணிவாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதுதான் கல்யாணத்துக்கு முன்னாடி நானே கண்கொண்டு பார்த்தேன் என்று கிருஷ்ணா மற்றும் அபி சேர்ந்த விஷயங்களை பற்றி ராகவ் சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான அபி, கிருஷ்ணா என்கிற முரளிக்கும் அபிக்கும் இதற்கு முன் என்ன சம்பந்தம் என்ன நடந்தது என்று எல்லா உண்மையும் ராகவனுக்கு சொல்லப் போகிறார். இதனை அடுத்து கிருஷ்ணாவின் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் வெளிவரப் போகிறது. அத்துடன் இனி ராகவ் மற்றும் அபி இருவரும் சேர்ந்து கிருஷ்ணாவின் உண்மையான முகத்திரையை குடும்பத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப் போகிறார்கள். இனி வரும் ஒவ்வொரு காட்சிகளும் சூடு பிடிக்க போகிறது.

Trending News