புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சந்திரமுகி படத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா.? தெளிவுபடுத்திய பி.வாசு.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வாசு. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. ஒரு காலத்தில் ரஜினி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

வாசு இயக்கும் படங்கள் அனைத்துமே நடிகர்களுக்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனாலேயே பல நடிகர்களும் வாசுவின் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் சிவலிங்கா.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக  நடித்தார். பேயை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் ஒரு பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

anushka-cinemapettai-01
anushka-cinemapettai-01

அதனால் மீண்டும் வாசு சந்திரமுகி 2ம் பாகம் படத்தை ராகவா லாரன்ஸ் வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரஜினிகாந்த் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒரு சிலர் ரஜினிகாந்த சிறிய வேடத்தில் நடிக்கிறார் என கூறி வந்தனர். மேலும் இப்படத்தில் ஜோதிகா பதிலாக அனுஷ்கா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.

 இதனைப்பற்றி  பிரபலங்கள் பலரும் வாசுவிடம் கேள்வி கேட்க அதற்கு இயக்குனர் வாசு போனில் அனுஷ்கா நடிப்பது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளை தேர்வு செய்து வருவதாக கூறியுள்ளார். கூடிய விரைவில் அனுஷ்கா நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிக்கிறார்கள் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

Trending News