சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அடையாளம் தெரியாமல் மாறிய ராகவா லாரன்ஸ்.. மிரட்டலான பர்ஸ்ட் லுக்.. எகிறும் எதிர்பார்ப்புகள்.

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என பல பிரிவுகளில் பிசியாக வலம் வரும் நட்சத்திரங்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர் இவரது படங்களுக்கென தனி வரவேற்பு உள்ளது இவர் இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

காமெடி கலந்த திகில் படங்களை இயக்கி வெற்றி கண்ட ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 மற்றும் செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அதோடு இப்படத்தை இயக்கி அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

durga
durga

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ’துர்கா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீண்ட தாடி மீசை என பார்ப்பதற்கு சாமியார் போல தோற்றமளிக்கிறார். எனவே இப்படமும் முந்தைய படங்களைப்போல ஹாரர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

durga
durga

இப்படத்தை ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

துர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Trending News