சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கெடா மீசை, ரத்தம் சொட்ட வெளிவந்த அதிகாரம் மோஷன் போஸ்டர்.. வெற்றிமாறன் கூட்டணியில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் எழுத்து வெற்றிமாறன், இயக்கம் துரை செந்தில் குமார் கூட்டணியில் அமைய உள்ளது.

வெற்றிமாறன் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படம் சைக்கோ திரில்லர் கலந்த படம் போல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சத்தமில்லாமல் பரபரப்பாக தற்போது ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது இந்த போஸ்டர்.

இந்த போஸ்டரில் கிடா மீசையுடன், ரத்தம் சொட்ட சொட்ட ராகவா லாரன்ஸ் மிகக் கொடூரமாக இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது சைக்கோ திரில்லர் கலந்த படமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

adhigaaram
adhigaaram

முதல்முறையாக வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்துள்ள ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Trending News