சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திரைத்துறையில் இருக்கும் ஒரே நண்பன்.. வெளிப்படையாக போட்டுடைத்த ராகவா லாரன்ஸ்!

தமிழ் திரையுலகில் ஆரம்ப காலத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். இவரது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. ஒரு கட்டத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிகராகவும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

திரைத்துறையில் பல நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய உள்ளார் ராகவா லாரன்ஸ். ஆனால் இந்த ஒரு பிரபலம் தான் திரைத்துறையில் எனக்கு நண்பன் என வெளிப்படையாக கூறிய சம்பவம் தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த நண்பன் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் விஜய் தான் தன்னுடைய நண்பன் என வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அதற்கு தொகுப்பாளர் விஜய் அவர்கள் மட்டும்தான் உங்கள் நண்பனா எனக் கேட்டதற்கு அவர் அளித்துள்ள பதில் என்ன தெரியுமா

திரைத்துறையில் யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது என்றும் அதுமட்டுமில்லாமல் எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முதல் போன் கால் வருவது விஜய்யிடம் இருந்து தான் என கூறியுள்ளார். மேலும் நானும் அவரும் நெருங்கிய நண்பர் என்பதால் நான் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டு,ம் தயாரிக்க வேண்டும் என்று எதையும் பேசியது கிடையாது.

அதேபோல் நடிகர் விஜய்யும் என்னிடம் இந்த படத்திற்கு நீங்கள் நடன இயக்குனராக பணியாற்ற வேண்டும், என்னை வைத்து படம் இயக்க வேண்டும் என அவரும் கூறியது கிடையாது எனக் கூறியுள்ளார்.

மேலும் இன்றைய காலத்தில் நண்பர்களாக பழகி விட்டால் அவர்களை வைத்து எப்படியாவது முன்னேறி விட வேண்டும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் நானும் விஜய்யும் எங்களது சுயநலத்திற்காக தங்களை பயன்படுத்திக் கொண்டது கிடையாது என கூறியுள்ளார்.

raghava lawrence vijay
raghava lawrence vijay

மேலும் எங்களுக்கு பேரு புகழ் தாண்டி எனக்கு பிரச்சனை என்றால் விஜய் ஓடி வருவதும், அவருக்கு பிரச்சினை என்றால் நான் அவருக்குத் துணையாக நிற்பது நான் காரணம் என கூறியுள்ளார். இந்த நட்பு இவ்வளவு ஆண்டுகளாக நீடித்து வருவதற்கு இதுதான் காரணம் என கூறியுள்ளார்

Trending News