சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ராகவா லாரன்சை கலாய்த்த மாஸ்டர் பட பிரபலம்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு

பிரபல நடன இயக்குனராக இருந்து நடிகராக வளர்ந்து வருபவர்கள் ராகவா லாரன்ஸ் உடைய அதிரடியான டான்ஸ் ரசிகர்கள் ஏராளம். அதே போல அவருடைய மிரட்டலான நடிப்புக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்திற்கு குறைவில்லை.

லாரன்ஸ் நடிப்பது மட்டுமின்றி பல சேவை சார்ந்த செயல்களிலும் அதிகம் ஈடுபடுவது, அவருடைய தொண்டு நிறுவனத்தை உள்ளவர்களை திறமையாக ஆடவைத்து திரையில் காட்டுவது அவருடைய சிறப்புத் தன்மை.

டான்ஸ் மாஸ்டராக இருந்து குணச்சித்திர நடிகர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் ,ஸ்டைல் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக, இப்போது பேய் படங்கள் என்றாலே நினைவிற்கு வருபவர் லாரன்ஸ். அந்த அளவிற்கு பேய் படங்களை தந்துள்ளார்.

முனி காஞ்சனா, காஞ்சனா 2 ,காஞ்சனா3, சிவலிங்கா போன்ற பேய் படங்களின் மூலமாக ஹிட் கொடுத்துள்ளார். தற்போது அதே பாணியில் துர்கா என்ற திரைப்படம் தயாராக இருப்பதாகவும் அதன் பஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்துள்ளன.

லாரன்ஸின் படத்தைவிட படத்திற்கு முன்னதாக வெளிவரும் போஸ்டர்கள் ரசிகர்களுடைய வைரலாக பரவுவது வழக்கமான ஒன்று இதேபோல துர்கா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வயதான தோற்றத்துடன் 2லுக் போஸ்டரில் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இந்த புகைப் படங்கள் வெளிவந்ததும் பலர் மரண கலாய் கலாய்த்து உள்ளனர்.

durga-raghava-lawrence-rathana-kumar
durga-raghava-lawrence-rathana-kumar

மாஸ்டர் பட பிரபலம் போஸ்டரை செமையாக கலாய்த்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மாஸ்டர் பட ஸ்கிரிப்ட் டைரக்டரும், ஆடை திரைப்பட இயக்குனருமான ரத்தினகுமார் டுவிட்டர் பக்கத்தில் துர்கா பட போஸ்டர்களை snapchat new filter என்று கலாய்த்து இருந்தார் இதைக்கண்ட ஃபாலோயர்ஸ் என்ன சார் பொசுக்குன்னு கலாய்ச்சிடிங்க என்று பதறிப்போய்விட்டனர்.

Trending News