சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

காஞ்சனா பட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் எதுவென்றால் அது காஞ்சனா தான். அதற்கு முன்னதாக தெலுங்கில் அவர் இயக்கிய மாஸ், ஸ்டைல், டான் படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் லாரன்ஸ் என்றாலே நமக்கு டக்கென நினைவுக்கு வருவது காஞ்சனாதான்.

காஞ்சனாவின் வெற்றிக்குப்பின்னே தமிழில் அதிக அளவில் பேய்ப்படங்கள் வரத்தொடங்கியது. காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் வெற்றி பெற்ற அளவிற்கு காஞ்சனா 3 வெற்றிபெறவில்லை. முதல் 2 பாகங்களைப்போலவே இருப்பதால் 3வது பாகம் தோல்வியைத் தழுவியது.

இதில் லாரன்ஸூக்கு ஜோடியாக ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடித்த நடிகை Alexandra Djavi. அதே பிளாஷ் பேக்கில் வில்லன் குரூப்பால் கொல்லப்படவே பேயாக வந்து வில்லன்களை பழிவாங்குவார்.

ரஷ்ய நாட்டை சேர்ந்த இவர், தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்துள்ளது. Alexandra Djavi அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Alexandra Djavi வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர்கள் அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்ததாகவும், இதனால் Alexandra Djavi மன அழுத்தத்தில் இருந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். காதல் பிரிவின் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

raghav-lawerance
raghav-lawerance

அவரின் மரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மரண செய்தி சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News