சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்கும் ராகவா லாரன்ஸ்.. என்ன தலைவரே இப்படி ஆயிடுச்சு!

தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்கள் ஏராளம். அப்படியாக நடன இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து நடிகர் இயக்குனர் என இரு பக்கங்களிலும் மாஸ் காட்டுபவர் நடிகர் ராகவா லாரண்ஸ்.

ராகவா புரொடக்சன்ஸ் பெயரில் பல்வேறு படங்களை தயாரிக்கவும் செய்கிறார். என்ன தான் தானே இயக்கிய படங்களில் நடித்தாலும் மாறுபட்ட இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரே தன்னை சூப்பர் ஸ்டார் ரசிகன் என குறிப்பிடுவதும் உண்டு. இப்படியாக ஒரு ரசிகருக்கு சூப்பர் ஸ்டார் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா விடுவார்.

chandramukhi2-cinemapettai
chandramukhi2-cinemapettai

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் “சந்திரமுகி”. தலைவரின் வாழ்வில் முக்கிய அம்சமாக அமைந்துள்ள “சந்திரமுகி” படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரண்ஸ் லீடான ரோலில் நடிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது ரஜினிக்கு பி வாசு நெருங்கிய நண்பர் என்பதாலும் ராகவா லாரன்ஸ் ரஜினி ரசிகர் என்பதாலும் ரஜினி இப்படத்தில் கெஸ்ட் ரோல் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாகவும் இந்த யோசனையை ராகவா லாரன்ஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News