தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் பட இசையமைப்பாளர் ஒருவர் சுமார் 26 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர வைத்துள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் அம்ரிஷ். இந்தப் படம் மட்டும் அல்லாமல் தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
அம்ரிஷ் பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அம்ரிஷ் தன்னுடைய வீட்டில் பாடல் கம்போஸிங்கில் இருக்கும் போது திடீரென ஒரு சிலர் அவரது வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசித்ரா உடனடியாக கமிஷனர் அலுவலகத்தில் சென்று யாரென்றே தெரியாத சிலர் தன் மகனை கடத்தி விட்டதாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் விசாரித்த காவல்துறையினர், மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துறை அலுவலர்கள் கூட்டி சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் 26 கோடி மோசடி செய்த விஷயத்தையும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசித்ரா தன் மகனை காப்பாற்றுவதற்காக விடிய விடிய கமிஷனர் ஆபீஸிலிருந்தும் எந்த ஒரு பலனும் கிடைக்க வில்லையாம்.
பின்னர் விசாரித்து பார்க்கையில் அம்ரிஷ் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரிடம் போலியான இரிடியம் பொருளை வாங்கி வெளிநாடுகளில் நல்ல விலை போகும் என விற்று விட்டார்களாம். 2013ம் ஆண்டே இந்த வேலையை செய்துள்ளனர்.
அதனடிப்படையில் விசாரித்தபோதுதான் மீண்டும் அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பல கோடி மோசடி செய்துள்ள விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். தற்போது அம்ரிஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.