புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூர்யா, தனுசை பொசுக்குனு டம்மியாக்கிய ராகவா லாரன்ஸ்.. எல்லாம் பேய் ராசி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ராகவா லாரன்ஸ் பல வருடங்களுக்கு முன்பே ஓரம் கட்டி விட்டதாக செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடன இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக மாறி ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்து தற்போது வெற்றிகரமாக நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். காமெடி கலந்த பேய் படங்கள் இவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது.

அந்த வகையில் முனி, காஞ்சனா போன்ற படங்கள் இவரது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன. இந்தப் படங்களைத் தவிர ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த மற்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இருந்தாலும் மார்க்கெட் விஷயத்திலும் சரி, சம்பள விஷயத்திலும் சரி, ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் தான் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக இருந்த போதே அனைத்து மொழிகளுக்கும் தெரிந்த நபராக இருந்தார்.

இதன் காரணமாகவே ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்படுகின்றன. இதனால் தற்போது ஒரு படத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறாராம். தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சூர்யாவே ஒரு படத்திற்கு 30 கோடி தான் வாங்குகிறார்.

அதேபோல் சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ் தன்னுடைய அடுத்த படங்களுக்கு 22 கோடி தான் சம்பளமாக வாங்கவுள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக இருக்கும் இவர்களை அசால்டாக சம்பள விஷயத்தில் ஓரம்கட்டி கெத்து காட்டுகிறார் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி 2 போன்ற படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ragava-lawrance-cinemapettai
ragava-lawrance-cinemapettai

Trending News