சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஆயிரம் தடை வந்தாலும் அந்தப்படத்தின் 4 வது பார்ட்டை எடுக்காமல் விடமாட்டேன்.. அதிரடி காட்டும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக தன்னுடைய கேரியரை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் இயக்குனராகவும் இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் என்ற படம் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ராகவா லாரன்சை குழந்தைகள் மத்தியில் அதிகம் கொண்டு போய் சேர்ந்த படங்கள் என்றால் அவர் எடுத்த முனி படங்கள் தான். காமெடி கலந்த திகில் கதையில் உருவாகி வசூலை வாரி குவித்தது.

இதுவரை ராகவா லாரன்ஸ் நடிப்பில் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. இதில் காஞ்சனா 3 படம் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் எப்படியாவது காஞ்சனா படத்தின் 4ம் பாகத்தை எடுக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம் ராகவா லாரன்ஸ். முன்னதாக ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் வாய்ப்புகள் வரவில்லை என்றால் கண்டிப்பாக முனி 5 காஞ்சனா 4 படத்தைதான் இயக்க இருந்ததாகவும், இருந்தாலும் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு கண்டிப்பாக காஞ்சனா 4 படத்தை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காஞ்சனா படங்களை ரசிகர்கள் வெறுத்து விட்டதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எந்த மாதிரி வித்தியாசமான கதையை வைத்து காஞ்சனா 4 படத்தை ராகவா லாரன்ஸ் எடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

kanchana4-cinemapettai
kanchana4-cinemapettai

Trending News