திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சொந்த செலவில் சூனியம் வைத்த ராகவா மாஸ்டர்.. ஆணவத்தின் உச்சத்தில் ஆடும் ரத்த சொந்தம்

Raghava Lawrence: ராகவா மாஸ்டருக்கு கடந்த சில படங்கள் எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. அதிலும் சந்திரமுகி 2 படம் அவரை காலை வாரிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதை ஜிகர்தண்டா 2 ஓரளவுக்கு காப்பாற்றி விட்டது.

இருந்தாலும் அவர் தரமான வெற்றியை கொடுக்க தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு ஆப்படிக்கும் வகையில் அவருடைய ரத்த சொந்தம் தேவையற்ற வேலைகளை பார்த்து வருவதாக திரையுலகினர் சலசலத்து வருகின்றனர்.

தற்போது லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். டைரி படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் இவர் நடித்து வருகிறார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இவருடைய ஆட்டம் ஓவராக இருக்கிறதாம். தன் அண்ணன் பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர் என நினைத்துக் கொண்டு தனக்கு தான் எல்லாம் தெரியும் என அவர் ஆணவத்தின் உச்சியில் ஆடி வருகிறாராம்.

Also read: சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

இந்த டார்ச்சரால் படத்தை எடுக்க முடியாமல் திணறும் இயக்குனர் தயாரிப்பாளருக்காக பொறுமை காத்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் இது ராகவாலாரன்ஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாக தான் இருக்கிறது.

தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்த அவருக்கு உடன்பிறப்பு இப்படி ஒரு கெட்ட பெயரை வாங்கி கொடுத்து இருக்கிறார். மேலும் உங்க அண்ணனே இன்னும் ஒழுங்காக ஒரு படம் பண்ணல. அதுக்குள்ள நீங்க இவ்வளவு ஆட்டம் ஆடுறீங்க.

இப்படியே போனா முதல் படமே உங்களுக்கு கடைசி படமா ஆயிடும் தம்பி என சிலர் நக்கலடித்து வருகின்றனர். உண்மையில் இது ராகவா மாஸ்டருக்கு தெரியுமா என தெரியவில்லை. ஆக மொத்தம் கே எஸ் ரவிக்குமார் இதிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஏனென்றால் அவர்தான் எல்வினை வைத்து முதலில் படம் இயக்குவதாக இருந்தார்.

Also read: ஜிகர்தண்டாவால் அடித்த அதிர்ஷ்டம்.. ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் லிஸ்ட்

Trending News