திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025

சந்தியா ராகம் சீரியலில் ஜானகியை வெளிய எடுக்க மாயாவுடன் கைகோர்க்க போகும் ரகுராம்.. மாட்டிக்கொண்ட புவனேஸ்வரி

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி திட்டத்தின் படி ரகுராம் குடும்பம் மாட்டிக் கொண்டது. அந்த வகையில் ஜெயிலுக்கு போக இருக்கும் ஜானகி நிரந்தரமாக ஜெயிலிலேயே இருக்க வேண்டும். அதற்கு கார்த்திக் இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது என்று கார்த்திக்கிடம் சொல்லி அவரை இந்த ஊரை விட்டு வெளியே போக சொன்னார்.

உடனே புவனேஸ்வரி சொன்ன மாதிரி கார்த்திக் ஊரிலிருந்து கிளம்ப முயற்சி எடுத்தார். அப்பொழுது போகும்போது கார்த்திக்கின் வக்கிர புத்தியால் மாயாவிடம் மாட்டிக்கொண்டார். மாயா, கார்த்திகை பார்த்துவிட்டு உயிரோடுதான் இருக்கிறான் சாகவில்லை என்று தெரிந்து கொண்டார். உடனே கார்த்திக் அந்த இடத்தை விட்டு ஓடும் பொழுது மாயா பிடிப்பதற்கு முயற்சி எடுத்தார்.

ஆனால் முடியாத பட்சத்தில் கார்த்திக்கு போகும் பொழுது ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது. உடனே அங்கு இருப்பவர்கள் கார்த்திக்கை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு புவனேஸ்வரிக்கு தகவலை கொடுத்து விடுகிறார்கள். புவனேஸ்வரி ஆஸ்பத்திரிக்கு போய் கார்த்திகை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து உன்னை ஊரை விட்டு தானே போக சொன்னேன். நீ ஏன் தேவையில்லாத வேலையை பார்த்தாய் என்று திட்டுகிறார்.

அந்த நேரத்தில் லிங்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் பண்ணி ஜானகி மீது குற்றமில்லை என நிரூபிக்க ஜாமினில் எடுக்கப் போகிறார்கள். அதற்கு பணம் கட்டுவதற்கு மாய முயற்சிக்கிறார் என்ற தகவலை கொடுத்து விடுகிறார். இதனைக் கேட்டு கோபத்தில் புவனேஸ்வரி, கார்த்திகை திட்டுகிறார். அத்துடன் ஜானகி வெளியே வராதபடி ஏதாவது பண்ண வேண்டும் என்று மறுபடியும் புவனேஸ்வரி பிளான் பண்ணப் போகிறார்.

அடுத்ததாக மாயா, ரகுராமிடம் பெரியம்மாவை ஜாமினில் எடுக்க வேண்டும் என்றால் பத்து லட்ச ரூபாய் பணம் தேவை என்று சொல்கிறார். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரகுராம் சொல்லி இதிலிருந்து விலகி விடுகிறார். பிறகு பார்வதி பத்மாவும் நகையும் பணமும் தரமாட்டோம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மாயா பணத்துக்கு ஏற்பாடு பண்ணி வருகிறார். இந்த சூழ்நிலையில் ரகுராம் சில விஷயங்களை யோசித்துப் பார்க்கிறார். அப்பொழுது என்ன இருந்தாலும் ஜானகி நம்மளுடைய மனைவி நம்மளை நம்பி வந்தவள். அவள் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் பொழுது உதவி பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி பணத்தை கட்டி விடுவார்.

அதன்படி ஜானகி ஜாமினில் வெளியே வந்து விடுவார். பிறகு கார்த்திக் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறார் என்ற உண்மை மாயாவுக்கு தெரிந்ததால் போலீஸ் குரு மூலம் கார்த்திகை கண்டுபிடித்து விட்டு ஜானகி மீது எந்த தவறும் இல்லை என்று இந்த பிரச்சனையிலிருந்து ஜானகியை காப்பாற்றி விடுவார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் இருந்து சூழ்ச்சி பண்ணியது புவனேஸ்வரி தான் என்று ரகுராம்க்கு உண்மை தெரிந்து விடும்.

Trending News